யோசுவா 14:1-15

14  குருவாகிய எலெயாசாரும், நூனின் மகனாகிய யோசுவாவும், இஸ்ரவேல் கோத்திரங்களின் தந்தைவழிக் குடும்பத் தலைவர்களும் கானான் தேசத்தை ஜனங்களுக்குப் பங்குபோட்டுக் கொடுத்தார்கள்.+  மோசே மூலம் யெகோவா கட்டளை கொடுத்திருந்தபடியே, ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும்+ குலுக்கல் முறையில் தேசம் பங்குபோட்டுக் கொடுக்கப்பட்டது.+  மற்ற இரண்டரைக் கோத்திரங்களுக்கு யோர்தானின் கிழக்கே உள்ள தேசத்தை மோசே பங்குபோட்டுக் கொடுத்திருந்தார்.+ ஆனால், லேவியர்களுக்கு தேசத்தில் எந்தப் பங்கையும் அவர் கொடுக்கவில்லை.+  யோசேப்பின் மகன்களாகிய மனாசேயும் எப்பிராயீமும்+ இரண்டு கோத்திரங்களாக ஆனார்கள்.+ லேவியர்களுக்குத் தேசத்தில் பங்கு கொடுக்கப்படாவிட்டாலும், அவர்கள் குடியிருப்பதற்கு நகரங்களும்,+ அவர்களுடைய மிருகங்களுக்கு மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன.+  மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே, தேசத்தை இஸ்ரவேலர்கள் பங்குபோட்டார்கள்.  பின்பு, யூதா கோத்திரத்து ஆண்கள் கில்காலிலிருந்த யோசுவாவிடம் வந்தார்கள்.+ கெனிசியனாகிய எப்புன்னேயின் மகன் காலேப்+ அவரிடம், “உண்மைக் கடவுளாகிய யெகோவா காதேஸ்-பர்னேயாவில்+ உங்களைப் பற்றியும் என்னைப் பற்றியும் தன்னுடைய ஊழியராகிய மோசேயிடம்+ என்ன சொன்னார்+ என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.  தேசத்தை உளவு பார்த்துவிட்டு+ வரச் சொல்லி யெகோவாவின் ஊழியராகிய மோசே என்னை காதேஸ்-பர்னேயாவிலிருந்து அனுப்பியபோது எனக்கு 40 வயது. நான் திரும்பி வந்து, அங்கு பார்த்ததை அப்படியே சொன்னேன்.+  என்னோடு வந்த என் சகோதரர்கள் ஜனங்களின் தைரியத்தைக் கெடுத்தார்கள். ஆனாலும், நான் என் கடவுளாகிய யெகோவாவுக்கு முழு இதயத்தோடு கீழ்ப்படிந்தேன்.+  அன்றைக்கு மோசே என்னிடம், ‘நீ என் கடவுளாகிய யெகோவாவுக்கு முழு இதயத்தோடு கீழ்ப்படிந்ததால் உன் காலடி பட்ட நிலம் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் நிரந்தர சொத்தாகக் கொடுக்கப்படும்’+ என்று சத்தியம் செய்தார். 10  இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் அலைந்தபோது யெகோவா மோசேக்கு வாக்குறுதி+ தந்தபடியே,+ இந்த 45 வருஷங்களாக யெகோவா என்னைக் காப்பாற்றி வந்திருக்கிறார்.+ இந்த 85 வயதிலும் நான் உயிரோடு இருக்கிறேன். 11  உளவு பார்ப்பதற்கு மோசே என்னை அனுப்பிய நாளில் எனக்கு எந்தளவு பலம் இருந்ததோ அந்தளவு பலம் இன்றும் இருக்கிறது. போர் செய்யவும் மற்ற வேலைகள் செய்யவும் அன்று போலவே இன்றும் எனக்குச் சக்தி இருக்கிறது. 12  அதனால், அன்றைக்கு யெகோவா வாக்குறுதி தந்தபடியே இந்த மலைப்பகுதியை எனக்குக் கொடுங்கள். இங்கே மதில் சூழ்ந்த பெரிய நகரங்களில் ஏனாக்கியர்கள்+ வாழ்கிறார்கள் என்று நீங்கள் அன்றைக்குக் கேள்விப்பட்டது உண்மைதான்.+ ஆனாலும் யெகோவா வாக்குறுதி தந்தபடியே,+ நான் அவர்களைத் துரத்திவிடுவேன். யெகோவா நிச்சயம் என்னோடு இருப்பார்”+ என்று சொன்னார். 13  எப்புன்னேயின் மகன் காலேபை யோசுவா ஆசீர்வதித்து அவருக்கு எப்ரோனைச் சொத்தாகக் கொடுத்தார்.+ 14  அதனால்தான், கெனிசியனாகிய எப்புன்னேயின் மகன் காலேபுக்கு எப்ரோன் சொந்தமானது. இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவுக்கு அவர் முழு இதயத்தோடு கீழ்ப்படிந்ததால்,+ அதுவே இன்றுவரை அவருடைய சொத்தாக இருக்கிறது. 15  எப்ரோன் முற்காலத்தில் கீரியாத்-அர்பா என்று அழைக்கப்பட்டது.+ (அர்பா என்பவன் ஏனாக்கியர்களில் மிகவும் செல்வாக்குள்ள மனிதனாக இருந்தான்.) தேசத்தில் போர் ஓய்ந்து, அமைதி திரும்பியது.+

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா