சங்கீதம் 62:1-12

இசைக் குழுவின் தலைவனுக்கு; எதித்தூன்.* தாவீதின் சங்கீதம். 62  நான் கடவுளுக்காக அமைதியாய்க் காத்திருக்கிறேன். அவர்தான் என்னை மீட்பார்.+   அவர்தான் என் கற்பாறை, என் மீட்பர், பாதுகாப்பான* அடைக்கலம்.+நான் ஒரேயடியாக அசைத்துத் தள்ளப்பட* மாட்டேன்.+   ஒருவனைக் கொல்வதற்காக எவ்வளவு காலம்தான் அவனைத் தாக்கிக்கொண்டே இருப்பீர்கள்?+ விழும் நிலையிலிருக்கிற சாய்ந்த கற்சுவர் போல நீங்கள் எல்லாரும் ஆபத்தானவர்களாக இருக்கிறீர்கள்.*   அவனை உயர்ந்த* நிலையிலிருந்து தள்ளுவதற்காக அவர்கள் ஒன்றுகூடி திட்டம் போடுகிறார்கள்.பொய் பேசுவதில் சந்தோஷப்படுகிறார்கள். தங்கள் வாயால் ஆசீர்வதிக்கிறார்கள், ஆனால் தங்கள் உள்ளத்தில் சபிக்கிறார்கள்.+ (சேலா)   நான் கடவுளுக்காக அமைதியாய்க் காத்திருக்கிறேன்.+ஏனென்றால், எனக்கு நம்பிக்கை தருகிறவர் அவர்தான்.+   அவர்தான் என் கற்பாறை, என் மீட்பர், பாதுகாப்பான அடைக்கலம்.நான் ஒருபோதும் அசைக்கப்பட மாட்டேன்.+   என் மீட்பும் மகிமையும் கடவுள் கையில்தான் இருக்கின்றன. கடவுள்தான் என்னுடைய பலமான கற்பாறை, என் அடைக்கலம்.+   ஜனங்களே, எப்போதும் அவர்மேல் நம்பிக்கை வையுங்கள். உங்களுடைய இதயத்தில் இருப்பதையெல்லாம் அவர்முன் ஊற்றிவிடுங்கள்.+ கடவுள்தான் நமக்குத் தஞ்சம்.+ (சேலா)   மனிதர்கள் எல்லாரும் வெறும் மூச்சுக்காற்றுதான்.மக்கள் எல்லாரும் மாயைதான்.+ அவர்கள் எல்லாரையும் தராசில் நிற்க வைத்தால், மூச்சுக்காற்றைவிட லேசாகத்தான் இருப்பார்கள்.+ 10  அடுத்தவர் பணத்தைப் பறித்து நன்றாக வாழலாம் என்று நினைக்காதீர்கள்.திருட்டுத் தொழிலில் வீணாக நம்பிக்கை வைக்காதீர்கள். உங்கள் செல்வம் பெருகும்போது, அதன் மேலேயே உங்கள் கவனத்தை* வைக்காதீர்கள்.+ 11  பலம் கடவுளுடையது.+ இதைக் கடவுளே சொன்னார், நான் இரண்டு தடவை கேட்டேன். 12  யெகோவாவே, மாறாத அன்பும் உங்களுடையதுதான்.+அவரவர் செயலுக்குத் தகுந்தபடி அவரவருக்கு நீங்கள் பலன் கொடுக்கிறீர்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “உயர்ந்த.”
வே.வா., “தடுமாறி விழ.”
அல்லது, “நீங்கள் எல்லாரும் அவனைப் பார்க்கிறீர்கள்.”
வே.வா., “கண்ணியமான.”
நே.மொ., “இதயத்தை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா