ஓசியா 13:1-16

13  “எப்பிராயீம் பேசியபோது, ஜனங்கள் நடுங்கினார்கள்.இஸ்ரவேலில் அவன் முக்கியமானவனாக இருந்தான்.+ ஆனால், பாகாலை வணங்கியதால் இறந்துபோனான்.+   எப்பிராயீமின் குடிமக்கள் பாவத்துக்குமேல் பாவம் செய்கிறார்கள்.வெள்ளிச் சிலைகளை உண்டாக்குகிறார்கள்;+ பார்த்துப் பார்த்து அவற்றைச் செதுக்குகிறார்கள்.அவை வெறும் கைத்தொழிலாளிகளின் வேலைப்பாடுகள். ‘பலி கொடுக்கிறவர்களே, கன்றுக்குட்டிகளை முத்தமிடுங்கள்’+ என்று சொல்கிறார்கள்.   அதனால், அவர்கள் காலைநேர மேகங்களைப் போலவும்,சீக்கிரத்தில் மறைந்துபோகிற பனித்துளிகளைப் போலவும்,களத்துமேட்டிலிருந்து சுழல்காற்றில் அடித்துச் செல்லப்படும் பதரைப் போலவும்,புகைக்கூண்டிலிருந்து வெளியேறும் புகையைப் போலவும் ஆகிவிடுவார்கள்.   நீங்கள் எகிப்தில் இருந்த காலத்திலிருந்து யெகோவாவாகிய நான்தான் உங்கள் கடவுள்.+என்னைத் தவிர வேறு கடவுளை உங்களுக்குத் தெரியாது.என்னைத் தவிர வேறு மீட்பர் இல்லை.+   வறண்ட வனாந்தரத்திலே உங்களைப் பராமரித்தேன்.+   நீங்கள் மேய்ச்சல் நிலங்களில் மேய்ந்து திருப்தியானீர்கள்.+திருப்தியானதும் உங்கள் இதயத்தில் கர்வம் வந்துவிட்டது. அதனால் என்னை மறந்துபோனீர்கள்.+   நான் உங்களுக்கு இளம் சிங்கம்போல் ஆவேன்.+வழியில் பதுங்கியிருக்கும் சிறுத்தைபோல் இருப்பேன்.   குட்டிகளைப் பறிகொடுத்த கரடிபோல் பாய்ந்து வந்து,உங்கள் நெஞ்சைக் கிழிப்பேன். சிங்கத்தைப் போல உங்களை விழுங்குவேன்.ஒரு காட்டு மிருகம் உங்களைக் கடித்துக் குதறும்.   இஸ்ரவேலே, அது உன்னை அழிக்கும்.ஏனென்றால், உனக்குத் துணையாய் இருந்தவரைவிட்டு விலகினாய். 10  உன்னுடைய எல்லா நகரங்களையும் காப்பாற்றுகிற ராஜா எங்கே?+உன் தலைவர்கள்* எங்கே?‘எனக்கு ராஜா வேண்டும், தலைவர்கள் வேண்டும்’ என்று கேட்டாயே.+ 11  கோபத்தோடு உனக்கு ஒரு ராஜாவைக் கொடுத்தேன்.+இப்போது, கடும் கோபத்தோடு அவனை நீக்கிவிடுவேன்.+ 12  எப்பிராயீமின் குற்றம் சுருட்டி* வைக்கப்பட்டிருக்கிறது.அவனுடைய பாவம் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. 13  அவன் பிரசவ வேதனைப்படுவான். அவன் அறிவில்லாத பிள்ளை.பிறக்க வேண்டிய நேரம் வந்தும், அவன் வெளியே வர விரும்புவதில்லை. 14  கல்லறையின் பிடியிலிருந்து அவனை விடுவிப்பேன்.சாவிலிருந்து அவனை மீட்பேன்.+ மரணமே, உன் கொடுக்குகள் எங்கே?+ கல்லறையே, உன் நாச வேலைகள் எங்கே?+ ஆனாலும், நான் கரிசனை காட்ட மாட்டேன். 15  நாணலின் நடுவில் அவன் செழித்து வளருவான்.ஆனாலும், கிழக்கிலிருந்து யெகோவா காற்றை அனுப்புவார்.அது வனாந்தரத்திலிருந்து வரும், அவனுடைய கிணறுகளையும் நீரூற்றுகளையும் வற்றிப்போகச் செய்யும். அவன் சேர்த்து வைத்திருக்கிற சொத்துகளெல்லாம் சூறையாடப்படும்.+ 16  கடவுளுக்கு அடங்கி நடக்காததால்+ சமாரியாமேல் குற்றம் சுமத்தப்படும்.+ ஜனங்கள் பட்டயத்தால் சாவார்கள்.+பிள்ளைகள் கொடூரமாக அடித்துக் கொல்லப்படுவார்கள். கர்ப்பிணிகளின் வயிறு கிழிக்கப்படும்.”

அடிக்குறிப்புகள்

நே.மொ., “நீதிபதிகள்.”
வே.வா., “சேமித்து.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா