ஓசியா 1:1-11

1  யூதாவின் ராஜாக்களான+ உசியா,+ யோதாம்,+ ஆகாஸ்,+ எசேக்கியா+ ஆகியவர்களின் காலத்திலும் இஸ்ரவேலின் ராஜாவும் யோவாசின்+ மகனுமாகிய யெரொபெயாமின்+ காலத்திலும் பெயேரியின் மகன் ஓசியாவுக்கு* யெகோவாவிடமிருந்து செய்தி கிடைத்தது.  ஓசியா மூலமாக யெகோவா தன்னுடைய செய்தியைச் சொல்ல ஆரம்பித்தபோது யெகோவா ஓசியாவிடம், “விபச்சாரம் செய்யப்போகிற ஒரு பெண்ணை நீ கல்யாணம் செய்து, விபச்சாரத்தால் அவளுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்குத் தகப்பனாக இரு. அப்படிப்பட்ட விபச்சாரத்தைச் செய்துதான் இந்தத் தேசம் யெகோவாவைவிட்டு முழுமையாக விலகிப்போயிருக்கிறது”+ என்று சொன்னார்.  அதனால், ஓசியா போய் திப்லாயிமின் மகளான கோமரைக் கல்யாணம் செய்தார். அவள் கர்ப்பமாகி அவருக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.  பின்பு யெகோவா, “யெஸ்ரயேலில் சிந்தப்பட்ட இரத்தத்துக்காக இன்னும் கொஞ்சக் காலத்தில் நான் யெகூவின் வம்சத்தாரைத் தண்டித்து,+ இஸ்ரவேலுடைய அரசாட்சிக்கு முடிவுகட்டப்போகிறேன்.+ அதனால், உன் மகனுக்கு யெஸ்ரயேல்* என்று பெயர் வை.  அந்த நாளில், நான் யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் இஸ்ரவேலின் வில்லை ஒடிப்பேன்” என்று சொன்னார்.  கோமர் மறுபடியும் கர்ப்பமாகி ஒரு மகளைப் பெற்றெடுத்தாள். அப்போது கடவுள் ஓசியாவிடம், “குழந்தைக்கு லோருகாமா* என்று பெயர் வை. ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இனியும் நான் இரக்கம் காட்ட மாட்டேன்,+ அவர்களைக் கண்டிப்பாகத் துரத்தியடிப்பேன்.+  ஆனால், யூதா ஜனங்களுக்கு நான் இரக்கம் காட்டுவேன்.+ அவர்களுடைய கடவுளாகிய நான் அவர்களைக் காப்பாற்றுவேன்.+ வில்லினாலோ வாளினாலோ போரினாலோ குதிரைகளினாலோ குதிரைவீரர்களினாலோ அல்ல, யெகோவாவாகிய நானே அவர்களைக் காப்பாற்றுவேன்”+ என்று சொன்னார்.  லோருகாமா தாய்ப்பால் மறந்த பின்பு, கோமர் மறுபடியும் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.  அப்போது கடவுள், “அவனுக்கு லோகம்மீ* என்று பெயர் வை. ஏனென்றால், நீங்கள் என்னுடைய ஜனங்களும் அல்ல, நான் உங்களுடைய கடவுளும் அல்ல” என்றார். 10  அதோடு, “அளக்கவோ எண்ணவோ முடியாத கடற்கரை மணலைப் போல இஸ்ரவேல் ஜனங்கள் ஏராளமாக இருப்பார்கள்.+ ‘நீங்கள் என்னுடைய ஜனங்கள் அல்ல’+ என்று எந்த இடத்தில் சொல்லப்பட்டதோ அதே இடத்தில், ‘நீங்கள் உயிருள்ள கடவுளின் பிள்ளைகள்’+ என்று சொல்லப்படும். 11  யூதா ஜனங்களும் இஸ்ரவேல் ஜனங்களும் ஒற்றுமையாகக் கூடிவந்து,+ ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்து, தேசத்தைவிட்டு வெளியே போவார்கள், அந்த நாள் யெஸ்ரயேலுக்கு விசேஷ நாளாக இருக்கும்.”+

அடிக்குறிப்புகள்

ஓசியா என்ற பெயரின் இன்னொரு வடிவம் ஒசாயா. அதன் அர்த்தம், “‘யா’ காப்பாற்றினார்.” ‘யா’ என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
அர்த்தம், “கடவுள் விதை விதைப்பார்.”
அர்த்தம், “இரக்கம் காட்டப்படவில்லை.”
அர்த்தம், “என்னுடைய ஜனங்கள் அல்ல.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா