உபாகமம் 32:1-52

32  “வானமே,* நான் பேசுவதைக் கேள்.பூமியே, என் வார்த்தைகளைக் கவனி.   என் அறிவுரைகள் மழைபோல் பொழியும்.என் வார்த்தைகள் பனிபோல் இறங்கும்.அவை புல்மேல் விழும் தூறல்போல் இருக்கும்.பயிர்மேல் கொட்டும் மழைபோல் இருக்கும்.   யெகோவாவின் பெயரை நான் புகழ்வேன்.+ நம் கடவுளுடைய மகத்துவத்தை+ எல்லாருக்கும் சொல்லுங்கள்!   அவர் கற்பாறை போன்றவர், அவருடைய செயல்கள் குறை இல்லாதவை.+அவருடைய வழிகளெல்லாம் நியாயமானவை.+ அவர் நம்பகமான கடவுள்,+ அநியாயமே செய்யாதவர்.+அவர் நீதியும் நேர்மையும் உள்ளவர்.+   அவர்கள்தான் தறிகெட்டு நடந்தார்கள்.+ அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல. குறையெல்லாம் அவர்கள்மேல்தான் இருக்கிறது.+ அவர்கள் சீர்கெட்டும் நெறிகெட்டும் நடக்கிற தலைமுறை!+   அறிவில்லாதவர்களே! முட்டாள்களே!+யெகோவாவுக்கு இப்படித்தான் நன்றி காட்டுவீர்களோ?+ உங்களுக்கு உயிர் கொடுத்த தகப்பன் அவர்தானே?+உங்களை உருவாக்கி, உங்களை நிலைநாட்டியவர் அவர்தானே?   பழங்காலத்தை நினைத்துப் பாருங்கள்.கடந்த தலைமுறைகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள். உங்கள் அப்பாவைக் கேளுங்கள், அவர் சொல்வார்.+உங்கள் பெரியோர்களை* கேளுங்கள், அவர்கள் விளக்குவார்கள்.   உன்னதமான கடவுள், ஆதாமின் பிள்ளைகளை* தனித்தனியாகப் பிரித்து,+எல்லாருக்கும் சொத்தைப் பங்குபோட்டபோது,+இஸ்ரவேலர்களின்+ எண்ணிக்கையை மனதில் வைத்து,அந்தந்த தேசத்தின் எல்லையைத் தீர்மானித்தாரே.+   யெகோவாவின் ஜனங்கள்தான் அவருடைய செல்வம்.+யாக்கோபுதான் அவருடைய சொத்து.+ 10  அவனை வனாந்தரத்தில்+ அவர் கண்டுபிடித்தார்.மிருகங்கள் ஓலமிடும் வெறுமையான பாலைவனத்தில்+ அவனைப் பார்த்தார். வேலிபோல் அவனைச் சூழ்ந்து நின்று பாதுகாத்தார்,+கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டார். கண்மணிபோல் காத்தார்.+ 11  கழுகு தன் குஞ்சுகளைக் கூட்டிலிருந்து கலைத்து,*அவற்றின் மேல் வட்டமிட்டுப் பறந்து,பின்பு கீழாக வந்து தன் இறக்கைகளை விரித்து,சிறகுகளில் அவற்றைச் சுமந்துகொண்டு போவது போல,+ 12  யெகோவா ஒருவரே அவனை* சுமந்து வந்தார்.+வேறு எந்தத் தெய்வமும் அவரோடு இல்லை.+ 13  பூமியின் உயர்ந்த இடங்களை அவன் கைப்பற்றும்படி செய்தார்.+வயலின் விளைச்சலைச் சாப்பிடக் கொடுத்தார்.+ மலையிலிருந்து தேனையும் கற்பாறையிலிருந்து எண்ணெயையும் தந்து போஷித்தார். 14  பசுமாட்டு வெண்ணெயும் ஆட்டுப் பாலும் ஊட்டினார்.கொழுத்த செம்மறியாடுகளையும், பாசானின் செம்மறியாட்டுக் கடாக்களையும்,வெள்ளாட்டுக் கடாக்களையும் தந்தார்.தரமான கோதுமையைக் கொடுத்தார்.+திராட்சைப் பழங்களின் ரசத்தை* நீ குடித்தாய். 15  ஆனால் யெஷுரனே,* நீ கொழுத்தபோது அவரையே எட்டி உதைத்தாய். நீ பெருத்துப்போனாய், தடித்துப்போனாய், ஊதிப்போனாய்.+ அதனால் உன்னைப் படைத்த கடவுளைவிட்டே விலகினாய்.+உன்னுடைய மீட்பின் கற்பாறையை அவமதித்தாய். 16  பொய் தெய்வங்களை வணங்கி அவருடைய எரிச்சலைக் கிளப்பினாய்.+அருவருப்பான காரியங்களைச் செய்து அவரைக் கோபப்படுத்தினாய்.+ 17  கடவுளுக்குப் பலி செலுத்தாமல், பேய்களுக்குப் பலி செலுத்தினாய்.+முன்பின் தெரியாத தெய்வங்களுக்கு,நேற்று முளைத்த தெய்வங்களுக்கு,உன் முன்னோர்களுக்குத் தெரியாத தெய்வங்களுக்குப் பலி செலுத்தினாய். 18  கற்பாறைபோல் இருக்கும் உன் கடவுளை மறந்துவிட்டாய்.+உனக்கு உயிர் கொடுத்தவரை நினைக்கத் தவறிவிட்டாய்.+ 19  யெகோவா அதைப் பார்த்தார்.தன்னுடைய மகன்களும் மகள்களும் தன்னைக் கோபப்படுத்தியதால் அவர்களை உதறித்தள்ளினார்.+ 20  பின்பு அவர், ‘என் முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக்கொள்வேன்.+அவர்களுக்கு நடக்கப்போவதைப் பார்ப்பேன். அவர்கள் நெறிகெட்ட தலைமுறை.+உண்மை இல்லாத வம்சம்.+ 21  ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை* கும்பிட்டு என் கோபத்தைக் கிளறினார்கள்.+வீணான சிலைகளை வணங்கி என்னை நோகடித்தார்கள்.+ அதனால், ஒன்றுக்கும் உதவாத ஜனத்தைக்கொண்டு நானும் அவர்களுடைய கோபத்தைக் கிளறுவேன்.+முட்டாள்தனமான தேசத்தைக்கொண்டு நானும் அவர்களை நோகடிப்பேன்.+ 22  என் கோபத் தீ பற்றியெரிகிறது.+அது கல்லறையின் அடிமட்டத்தையும் சுட்டெரிக்கும்.+பூமியையும் அதன் விளைச்சலையும் பொசுக்கும்.மலைகளின் அஸ்திவாரங்களையே கொழுந்துவிட்டு எரிய வைக்கும். 23  நான் வேதனைக்குமேல் வேதனையைக் கொண்டுவருவேன்.அவர்கள்மேல் என் அம்புகளை எறிவேன். 24  பசி அவர்களை வாட்டியெடுக்கும்.+கடுமையான காய்ச்சலும் பயங்கரமான அழிவும் அவர்களைத் தாக்கும்.+ கொடிய மிருகங்கள் அவர்களைப் பீறிப்போடும்.+நிலத்தில் ஊரும் விஷப் பிராணிகள் அவர்களைக் கடிக்கும். 25  வாலிபர்களோ கன்னிப்பெண்களோ,குழந்தைகளோ கிழவர்களோ,+வெளியே இருக்கிற எல்லாரையும் வாள் வெட்டித்தள்ளும்!+உள்ளே இருக்கிற எல்லாரையும் திகில் கவ்விக்கொள்ளும்!+ 26  நான் உங்களிடம், “உங்களைச் சிதறிப்போக வைத்துவிடுவேன்,உங்களைப் பற்றிய நினைவே உலகத்தில் இல்லாதபடி செய்துவிடுவேன்” என்று சொல்ல நினைத்தேன். 27  ஆனால் எதிரிகள் உண்மையைப் புரட்டி,+ “எங்கள் வீரத்தால்தான் ஜெயித்தோம்,+யெகோவா எதுவும் செய்யவில்லை” என்று பெருமையடிப்பார்களோ என்று நினைத்தேன்.+ அதனால் அப்படிச் சொல்லாமல் விட்டுவிட்டேன். 28  இஸ்ரவேலர்கள் அறிவில்லாத* ஜனங்கள், அவர்களுக்குப் புத்தியே* இல்லை.+ 29  அப்படிப் புத்தி இருந்தால்+ இதை யோசித்துப் பார்ப்பார்களே.+ வரப்போகும் கதியை நினைத்துப் பார்ப்பார்களே.+ 30  அவர்களுக்குக் கற்பாறைபோல் இருந்தவர் அவர்களைக் கைவிட்டுவிட்டார்.+யெகோவா அவர்களை எதிரிகளின் கையில் கொடுத்துவிட்டார். அதனால்தான் அவர்களில் ஆயிரம் பேரை ஒருவனால் விரட்ட முடிந்தது.அவர்களில் பத்தாயிரம் பேரை வெறும் இரண்டு பேரால் துரத்த முடிந்தது.+ 31  (அவர்களுடைய கடவுள்* நம்முடைய கடவுளுக்கு* ஈடாக முடியாது.+நம்முடைய எதிரிகளுக்கும் இது தெரியும்.+) 32  அவர்களுடைய திராட்சைக் கொடி சோதோமின் திராட்சைக் கொடி,கொமோராவின் தோட்டங்களில் விளைந்த திராட்சைக் கொடி.+ அவர்களுடைய திராட்சைப் பழங்கள் விஷம் நிறைந்தவை.அவர்களுடைய திராட்சைக் குலைகள் கசப்பானவை.+ 33  அவர்களுடைய திராட்சமது பாம்புகளின் விஷம்,அது நாகப்பாம்புகளின் கொடிய நஞ்சு. 34  இதையெல்லாம் நான் முத்திரைபோட்டு மூடியிருக்கிறேன்.என் களஞ்சியத்தில் அடைத்து வைத்திருக்கிறேன்.+ 35  பழிவாங்குவதும் பழிதீர்ப்பதும் என் பொறுப்பு.+குறித்த நேரத்தில் அவர்கள் தடுக்கி விழுவார்கள்.+அவர்களுடைய அழிவு நாள் நெருங்கிவிட்டது.அவர்களுக்கு நடக்க வேண்டியதெல்லாம் சீக்கிரத்தில் நடக்கும்’ என்று சொன்னார். 36  யெகோவா தன்னுடைய ஜனங்களுக்குத் தீர்ப்பு கொடுப்பார்.+தன்னுடைய ஊழியர்களின் பலம் குறைந்துவிட்டதைப் பார்க்கும்போதும்,ஆதரவற்றவர்களும் அற்பமானவர்களும் மட்டுமே மீந்திருப்பதைப் பார்க்கும்போதும்,அவர் பரிதாபப்படுவார்.+ 37  அப்போது அவர், ‘அவர்களுடைய தெய்வங்கள் எங்கே?+அவர்கள் அடைக்கலம் தேடிய கற்பாறை எங்கே? 38  அவர்களுடைய பலிகளின் கொழுப்பைத் தின்ற தெய்வங்கள் எங்கே?அவர்கள் செலுத்திய திராட்சமதுவைக் குடித்த தெய்வங்கள் எங்கே?+ அவை வந்து அவர்களுக்கு* உதவி செய்யட்டும். அவை அவர்களுக்குப் பாதுகாப்பு தரட்டும். 39  நான் மட்டும்தான் கடவுள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.+என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.+ உயிர் கொடுக்கிறவரும் உயிர் எடுக்கிறவரும் நானே.+ காயப்படுத்துகிறவரும்+ குணப்படுத்துகிறவரும் நானே.+என் கையிலிருந்து யாரையும் யாராலும் காப்பாற்ற முடியாது.+ 40  என் கையை உயர்த்தி,*“என்றென்றும் வாழ்கிற என்மேல்” ஆணையாகச் சொல்கிறேன்,*+ 41  என்னுடைய பளபளப்பான வாளைத் தீட்டுவேன்.தீர்ப்பு கொடுப்பதற்குத் தயாராவேன்.+என் எதிரிகளைப் பழிவாங்குவேன்.+என்னை வெறுக்கிறவர்களைப் பழிதீர்ப்பேன். 42  எதிரிகளுடைய தலைவர்களின் தலைகளைஎன் வாள் விழுங்கும்.வெட்டப்பட்டவர்களின் இரத்தத்தையும், சிறைபிடிக்கப்பட்டவர்களின் இரத்தத்தையும்என் அம்புகள் குடிக்கும்’ என்று சொல்வார். 43  தேசங்களே, அவருடைய ஜனங்களோடு சேர்ந்து சந்தோஷப்படுங்கள்.+ஏனென்றால், அவருடைய ஊழியர்களின் இரத்தத்துக்காக அவர் பழிவாங்குவார்.+எதிரிகளுக்குப் பதிலடி தருவார்.+தன்னுடைய ஜனங்களின் தேசத்தைச் சுத்திகரிப்பார்.” 44  மோசே இந்தப் பாடல் வரிகளை ஜனங்களுடைய காதில் விழும்படி சொன்னார்.+ நூனின் மகன் ஓசெயாவும்*+ அவரோடு இருந்தார். 45  இஸ்ரவேலர்கள் எல்லாரிடமும் இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபின், 46  மோசே அவர்களிடம், “இன்று நான் கொடுக்கும் எச்சரிக்கையை இதயத்தில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.+ இந்தத் திருச்சட்டத்தின்படி நடக்க வேண்டுமென்று உங்களுடைய மகன்களுக்குக் கட்டளை கொடுங்கள்.+ 47  இவையெல்லாம் வெற்று வார்த்தைகள் அல்ல, வாழ்வு தரும் வார்த்தைகள்.+ இவற்றின்படி நடந்தால், நீங்கள் யோர்தானைக் கடந்துபோய் சொந்தமாக்கப்போகிற தேசத்தில் நீடூழி வாழ்வீர்கள்” என்று சொன்னார். 48  அதே நாளில் யெகோவா மோசேயிடம், 49  “மோவாப் தேசத்தில், எரிகோவைப் பார்த்தபடி இருக்கிற இந்த அபாரீம் மலைத்தொடரிலுள்ள+ நேபோ மலைக்கு+ நீ ஏறிப்போ. நான் இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்போகிற கானான் தேசத்தை+ அங்கிருந்து பார். 50  ஓர் என்ற மலையில் உன் அண்ணன் ஆரோன் இறந்தது போல,+ நேபோ மலையில் நீயும் இறந்துபோவாய்.* 51  ஏனென்றால், சீன் வனாந்தரத்திலுள்ள காதேசில் இருக்கிற மேரிபாவின் தண்ணீர் விஷயத்தில், நீங்கள் இரண்டு பேரும் இஸ்ரவேலர்களின் முன்னால் எனக்கு உண்மையாக நடக்கவில்லை,+ என்னை மகிமைப்படுத்தவில்லை.+ 52  இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் தருகிற தேசத்தை நீ தூரத்திலிருந்துதான் பார்ப்பாய், அதற்குள் நீ போக மாட்டாய்”+ என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “பரலோகமே.”
வே.வா., “மூப்பர்களை.”
அல்லது, “மனித இனத்தை.”
வே.வா., “கழுகு தன் குஞ்சுகளுக்குப் பறக்கக் கற்றுக்கொடுக்கும்போது.”
அதாவது, “யாக்கோபை.”
நே.மொ., “இரத்தத்தை.”
இந்தப் பெயரின் அர்த்தம், “நேர்மையானவன்”; இது இஸ்ரவேலின் கௌரவப் பட்டம்.
வே.வா., “தெய்வமே இல்லாத ஒன்றை.”
அல்லது, “புத்திமதியைக் கேட்காத.”
வே.வா., “புரிந்துகொள்ளுதலே.”
நே.மொ., “கற்பாறை.”
நே.மொ., “கற்பாறைக்கு.”
நே.மொ., “உங்களுக்கு.”
நே.மொ., “பரலோகத்துக்கு நேராக உயர்த்தி.”
அதாவது, “நான் என்றென்றும் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
இதுதான் முதலில் யோசுவாவின் பெயர். ஓசி 1:1-ன் அடிக்குறிப்பைப் பாருங்கள்.
நே.மொ., “உன் முன்னோர்களுடன் சேர்க்கப்படுவாய்.” எபிரெயுவில் கவிதை நடையிலுள்ள இந்த வார்த்தைகள் மரணத்தைக் குறிக்கின்றன.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா