படிப்பு 13
நடைமுறைப் பயனைத் தெளிவாகச் சொல்வது
நீதிமொழிகள் 3:21, அடிக்குறிப்பு
சுருக்கம்: நீங்கள் பேசும் விஷயம் தங்களுடைய வாழ்க்கைக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள கேட்பவர்களுக்கு உதவி செய்யுங்கள். கற்றுக்கொள்ளும் விஷயங்களை அவர்கள் எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்றும் புரிய வையுங்கள்.
எப்படிச் செய்வது?
-
கேட்பவர்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். நீங்கள் சொல்லும் விஷயத்தை அவர்கள் ஏன் கேட்க வேண்டுமென்று நன்றாக யோசித்துப் பாருங்கள். அந்த விஷயத்தின் எந்த அம்சம் முக்கியமாக அவர்களுக்கு உதவும் என்றும் யோசித்துப் பாருங்கள்.
-
கேட்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பேச்சு முழுவதும் சொல்லுங்கள். கேட்பவர்கள் ஒவ்வொருவரும், ‘இது எனக்கே சொன்ன மாதிரி இருக்கு’ என்று ஆரம்பத்திலிருந்தே நினைக்க வேண்டும். ஒவ்வொரு முக்கியக் குறிப்பையும் விளக்கும்போது, அதை எப்படி வாழ்க்கையில் பொருத்துவது என்று சொல்லுங்கள். பொதுப்படையாகப் பேசாமல் திட்டவட்டமாகப் பேசுங்கள்.