யாருடைய அதிகாரத்தை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்?
அதிகாரம் 14
யாருடைய அதிகாரத்தை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்?
“அதிகாரம்” என்பது அநேக ஆட்களுக்கு வெறுப்பூட்டும் ஒரு சொல்லாகும். இது புரிந்துகொள்ளப்படத்தக்கதே, ஏனெனில் அதிகாரமானது வேலை செய்யுமிடத்தில், குடும்பத்தில், மேலும் அரசாங்கங்களால் அநேகமாக துர்ப்பிரயோகம் செய்யப்படுகிறது. பைபிள் உண்மைநிலையை இவ்வாறு விவரிக்கிறது: ‘ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷன்மீது ஆளுகைசெய்கிறான்.’ (பிரசங்கி 8:9) ஆம், அநேகர் கொடுமையாகவும் தன்னலமே கருதி செயல்படுவதன் மூலமும் மற்றவர்கள்மீது ஆதிக்கம் செலுத்திவந்திருக்கிறார்கள்.
2ஆனால் எல்லா அதிகாரங்களும் தீங்கிழைப்பவையாக இல்லை. உதாரணமாக, நம்முடைய உடல் நம்மீது அதிகாரம் செலுத்துவதாக சொல்லப்படலாம். அது சுவாசிக்கவும், சாப்பிடவும், குடிக்கவும், உறங்கவும் நமக்கு “கட்டளையிடுகிறது.” இது சுமையாக இருக்கிறதா? இல்லை. இந்த வேண்டுகோள்களுக்கு இணங்குவது நம்முடைய நன்மைக்காக இருக்கிறது. நம்முடைய உடலின் தேவைகளுக்குக் கீழ்ப்படிவது எண்ணாமல் நிகழ்கிறபோதிலும், நம்முடைய மனமுவந்த கீழ்ப்படிதலைத் தேவைப்படுத்தும் மற்ற வகையான அதிகாரங்கள் இருக்கின்றன. ஒருசில உதாரணங்களைச் சிந்தியுங்கள்.
உன்னதமான அதிகாரம்
3பைபிளில் 300-க்கும் மேற்பட்ட தடவை யெகோவா ‘உன்னத அரசதிகாரமுள்ள ஆண்டவர்,’ (NW) என்பதாக அழைக்கப்படுகிறார். உயரிய அதிகாரம் படைத்தவரே உன்னத அரசதிகாரமுள்ளவர் ஆவார். இந்த அந்தஸ்தைப் பெற யெகோவாவுக்கு எது உரிமையளிக்கிறது? வெளிப்படுத்துதல் 4:11 பதிலளிக்கிறது: “கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர். உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.”
ஏசாயா 40:26; ஆதியாகமம் 17:1) என்றபோதிலும், யெகோவாவின் மேலோங்கிய பண்பு அன்பாக இருப்பதன் காரணமாக அவர் தம்முடைய பலத்தை நன்மையான விதத்தில் காண்பிக்கிறார்.—1 யோவான் 4:16.
4நம்முடைய படைப்பாளராக, யெகோவா தாம் விரும்பியபடி தம்முடைய அதிகாரத்தை அப்பியாசிக்க உரிமையுடையவராக இருக்கிறார். இது திகிலூட்டுவதாக தோன்றக்கூடும், விசேஷமாக கடவுள் ‘மகா பெலத்தை’ உடையவராக இருப்பதை நாம் சிந்திக்கையில், அவர் “சர்வவல்லமையுள்ள தேவன்,” என்பதாக அழைக்கப்படுகிறார்—இது எபிரெயுவில் அடக்கியாளும் பலத்தைக் குறிக்கும் ஒரு பதமாகும். (5தவறுசெய்து மனந்திரும்பாதவர்கள்மீது யெகோவா தண்டனையைக் கொண்டுவருவார் என்பதாக எச்சரித்தபோதிலும், மோசே முக்கியமாக அவரை, ‘தம்மில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவனாகவே’ அறிந்திருந்தார். (உபாகமம் 7:9) சற்று கற்பனை செய்துபாருங்கள்! சர்வலோகத்தின் உன்னத அதிகாரி தம்மைச் சேவிக்கும்படி நம்மைக் கட்டாயப்படுத்துவதில்லை. மாறாக, அவருடைய அன்பின் காரணமாக நாம் அவரிடமாக கவர்ந்திழுக்கப்படுகிறோம். (ரோமர் 2:4; 5:8) யெகோவாவின் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருப்பது இன்பமாகவும்கூட இருக்கிறது, ஏனென்றால் அவருடைய சட்டங்கள் எப்பொழுதும் நம்முடைய முடிவான நன்மைக்காக செயல்படுபவையாகவே இருக்கின்றன.—சங்கீதம் 19:7, 8.
6நம்முடைய முதல் பெற்றோர் கடவுளுடைய உன்னத அரசதிகாரத்தை நிராகரித்துவிட்டனர். அவர்கள் தங்களுக்கு எது நல்லது எது கெட்டது என்பதை தாங்களாகவே தீர்மானிக்க விரும்பினார்கள். (ஆதியாகமம் 3:4-6) இதன் விளைவாக, அவர்கள் தங்களுடைய பரதீஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதற்குப் பிறகு, அபூரணமான சமுதாயமாக இருந்தபோதிலும் ஒழுங்கான சமுதாயமாக வாழ்வதற்கு அவர்களுக்கு உதவிசெய்யக்கூடிய அதிகார அமைப்புகளை மனிதர்கள் உருவாக்கிக்கொள்ள யெகோவா அனுமதித்தார். இந்த அதிகாரங்களில் சில யாவை, எந்த அளவுக்கு நாம் இவற்றிற்கு கீழ்ப்படிந்திருக்கும்படியாக கடவுள் எதிர்பார்க்கிறார்?
‘மேலான அதிகாரங்கள்’
7அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ரோமர் 13:1-7; தீத்து 3:1) மனிதனின் அரசாங்க அதிகாரங்களை யெகோவா தோற்றுவிக்கவில்லை, ஆனால் அவை அவருடைய அனுமதியினால் இருக்கின்றன. ஆகவே பவுலால் இவ்வாறு எழுதமுடிந்தது: “உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.” இப்படிப்பட்ட பூமிக்குரிய அதிகாரத்தைப்பற்றி இது என்ன சுட்டிக்காட்டுகிறது? இது கடவுளுடைய அதிகாரத்துக்குத் தாழ்ந்ததாக அல்லது தரம் குறைவானதாக இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. (யோவான் 19:10, 11) ஆகவே, மனிதனுடைய சட்டமும் கடவுளுடைய சட்டமும் முரண்படும்போது, கிறிஸ்தவர்கள் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட தங்களுடைய மனச்சாட்சியால் வழிநடத்தப்பட வேண்டும். அவர்கள் ‘மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் அரசராக தேவனுக்கே கீழ்ப்படியவேண்டும்.’—அப்போஸ்தலர் 5:29.
ஒரு அதிகாரமுமில்லை.” ‘மேலான அதிகாரங்கள்’ எவை? தொடர்ந்துவரும் வசனங்களில் பவுலினுடைய வார்த்தைகள் அவை மனித அரசாங்க அதிகாரங்கள் என்பதைக் காண்பிக்கின்றன. (8என்றபோதிலும், பெரும்பாலான சமயங்களில், அரசாங்க மேலான அதிகாரங்கள் ‘நமக்கு நன்மை உண்டாகும்பொருட்டு, தேவ ஊழியக்காரராகரோமர் 13:4) என்ன வழிகளில்? ஆம், மேலான அதிகாரங்கள் அளிக்கும் தபால் பட்டுவாடா, காவல் துறை, தீயணைப்புத் துறை, சுகாதாரம், கல்வி போன்ற எண்ணற்ற சேவைகளைக் குறித்து சிந்தித்துப்பாருங்கள். “இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள்,” என்று பவுல் எழுதினார். “அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவஊழியக்காரராயிருக்கிறார்களே.” (ரோமர் 13:6) வரிகள் அல்லது வேறு எந்தச் சட்டப்பூர்வமான கடமையைப் பொருத்தவரையில், நாம் “யோக்கியமாய் நடக்க விரும்”பவேண்டும்.—எபிரெயர் 13:18.
செயல்படுகின்றன. (9சில சமயங்களில் மேலான அதிகாரங்கள் தங்கள் அதிகாரத்தைத் துர்ப்பிரயோகம் செய்கின்றன. அவற்றிற்கு கீழ்ப்பட்டிருக்கவேண்டிய நம்முடைய உத்தரவாதத்திலிருந்து இது நம்மை விடுதலை செய்துவிடுகிறதா? இல்லை, அவ்வாறு செய்வதில்லை. யெகோவா இந்த அதிகாரங்களின் தவறான செயல்களைப் பார்க்கிறார். (நீதிமொழிகள் 15:3) மனித ஆட்சியை அவர் சகித்துக்கொண்டிருப்பதானது அதன் ஊழலை கவனியாமல் இருக்கிறார் என்பதை அர்த்தப்படுத்துவதில்லை; அல்லது நாம் அவ்விதமாகச் செய்யும்படி அவர் எதிர்ப்பார்ப்பதும் இல்லை. ஆம், கடவுள் சீக்கிரத்தில், “அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி” அதற்குப் பதிலாக தம்முடைய சொந்த நீதியுள்ள அரசாங்கத்தின் ஆட்சியை வைப்பார். (தானியேல் 2:44) ஆனால் இது சம்பவிக்கும் வரையாக, மேலான அதிகாரங்கள் பயனுள்ள ஒரு நோக்கத்தை சேவிக்கின்றன.
10பவுல் விளக்கினார்: “அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு [“ஏற்பாட்டுக்கு,” NW] எதிர்த்துநிற்கிறான்.” (ரோமர் 13:2) ஓரளவு ஒழுங்கைக் காப்பதால் மேலான அதிகாரங்கள் கடவுளுடைய ‘ஏற்பாடாக’ இருக்கின்றன, அவை இல்லாமல் குழப்பமும் அராஜகமும் மேலோங்கியிருக்கும். மேலான அதிகாரங்களை எதிர்ப்பது வேதப்பூர்வமற்றதாகவும் அறிவற்றதாகவும் இருக்கும். இதை விளக்க: உங்களுக்கு ஒரு அறுவைசிகிச்சை செய்யப்பட்டதாகவும் காயம்பட்ட இடம் தைக்கப்பட்டிருப்பதாகவும் கற்பனை செய்துகொள்ளுங்கள். தையல்கள் உடலுக்கு அந்நியப் பொருட்களாக இருந்தபோதிலும், குறிப்பிட்ட ஒரு காலத்துக்கு அவை ஒரு நோக்கத்தை சேவிக்கின்றன. உரிய காலத்துக்கு முன்பாக அவற்றை நீக்கிவிடுவது தீங்கிழைப்பதாக இருக்கும். அதேவிதமாகவே, மனித அரசாங்க அதிகாரங்கள் கடவுளுடைய ஆதி நோக்கத்தின் பாகமாக இருக்கவில்லை. என்றபோதிலும், அவருடைய ராஜ்யம் பூமியை முழுமையாக ஆட்சிசெய்யும் வரையாக, மனித அரசாங்கங்கள் சமுதாயத்தை ஒன்றாகச் சேர்த்து இணைத்துவைக்கின்றன, தற்காலத்துக்குரிய கடவுளுடைய நோக்கத்தோடு பொருந்தும் ஒரு பணியை நிறைவேற்றிவருகின்றன. இதன் காரணமாக கடவுளுடைய சட்டத்துக்கும் அதிகாரத்துக்கும் முதல் இடத்தைக் கொடுத்து, அதே சமயத்தில் மேலான அதிகாரங்களுக்கு நாம் தொடர்ந்து கீழ்ப்பட்டிருக்க வேண்டும்.
குடும்பத்தில் அதிகாரம்
11மனித சமுதாயத்தின் அடிப்படை பிரிவு குடும்பமாகும். அதனுள்ளே ஒரு கணவனும் மனைவியும் பலனளிக்கும் தோழமையைக் காணலாம், பிள்ளைகள் பாதுகாப்பளிக்கப்பட்டு முழு வளர்ச்சிப் பருவத்துக்குப் பயிற்றுவிக்கப்படலாம். (நீதிமொழிகள் 5:15-21; எபேசியர் 6:1-4) குடும்ப அங்கத்தினர்கள் சமாதானமாகவும் ஒத்திசைவாகவும் வாழும்படி உதவுவதற்கு இப்படிப்பட்ட ஒரு சிறந்த ஏற்பாடு ஒழுங்கமைக்கப்பட்டதாக இருக்கவேண்டும். இதைச் செய்வதற்கான யெகோவாவின் வழி தலைமைத்துவம் என்ற நியமத்தின் மூலமாகும். இது 1 கொரிந்தியர் 11:3-ல் காணப்படும் இந்த வார்த்தைகளில் சுருக்கமாக சொல்லப்பட்டுள்ளது: “ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும் ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறாரென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.”
12கணவன் குடும்பத்தின் தலைவராக இருக்கிறார். என்றபோதிலும், அவருக்கு மேலாக ஒரு தலைவர் இருக்கிறார்—இயேசு கிறிஸ்து. பவுல் எழுதினார்: “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து . . . தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.” (எபேசியர் 5:25, 27) ஒரு கணவன், இயேசு எப்போதும் சபையை நடத்திவருவது போலவே தன் மனைவியை நடத்தும்போது கிறிஸ்துவுக்குத் தன்னுடைய கீழ்ப்படிதலைக் காண்பிக்கிறார். (1 யோவான் 2:6) இயேசுவுக்கு அதிகமான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதை அவர் மிக அதிகமான மென்மையோடும், அன்போடும், நியாயத்தன்மையோடும் அப்பியாசிக்கிறார். (மத்தேயு 20:25-28) ஒரு மனிதனாக, இயேசு ஒருபோதும் தம்முடைய அதிகார ஸ்தானத்தைத் துர்ப்பிரயோகம் செய்யவில்லை. அவர் “சாந்தமும் மனத்தாழ்மையுமாய்” இருந்தார். மேலும் தம்மைப் பின்பற்றுவோரை ‘அடிமைகள்’ என்பதாக இல்லாமல் ‘சிநேகிதர்கள்’ என்று அழைத்தார். “நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்,” என்பதாக அவர்களுக்கு வாக்களித்தார், அதைத்தான் அவர் செய்தார்.—மத்தேயு 11:28, 29; யோவான் 15:15, NW.
13கிறிஸ்தவ தலைமைத்துவம் என்பது கொடூரமாக அதிகாரம் செலுத்துவதற்குரிய ஒரு ஸ்தானம் அல்ல என்பதை இயேசுவின் முன்மாதிரி கணவன்மார்களுக்குக் கற்பிக்கிறது. மாறாக, அது மரியாதை மற்றும் சுயதியாக அன்புக்குரிய ஒன்றாக இருக்கிறது. இது ஒரு துணைவரை சரீரப்பிரகாரமாகவும் வாய்சொல்லின் மூலமாகவும் மோசமாய் நடத்துவதை தெளிவாகவே தகுதியற்றதாக விலக்கிவிடும். (எபேசியர் 4:29, 31, 32; 5:28, 29; கொலோசெயர் 3:19) ஒரு கிறிஸ்தவ மனிதன் தன்னுடைய மனைவியைத் தவறாக நடத்துவாரேயானல், அவருடைய மற்ற நல்ல கிரியைகள் மதிப்பற்றதாகிவிடும், அவருடைய ஜெபங்களுக்கு அது தடையாக இருக்கும்.—1 கொரிந்தியர் 13:1-3; 1 பேதுரு 3:7.
14ஒரு கணவன் கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றும்போது, எபேசியர் 5:22, 23-லுள்ள பின்வரும் வார்த்தைகளுக்கு இசைவாக நடப்பது அவருடைய மனைவிக்கு எளிதாக இருக்கிறது: “மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்.” ஒரு கணவன் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்பட்டவராக இருக்க வேண்டியிருப்பது போலவே, ஒரு மனைவி தன்னுடைய கணவனுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும். திறமையுள்ள மனைவிமார் அவர்களுடைய தெய்வீக ஞானத்துக்காகவும் கடினமான உழைப்புக்காகவும் கனத்தையும் பாராட்டுதலையும் பெற்றுக்கொள்ள தகுதியுள்ளவர்கள் என்பதையும்கூட பைபிள் தெளிவாக்குகிறது.—நீதிமொழிகள் 31:10-31.
15தன் கணவனுக்கு ஒரு கிறிஸ்தவ மனைவி கீழ்ப்பட்டிருப்பது சம்பந்தப்பட்ட ஒன்றாகும். குறிப்பிட்ட ஏதோ ஒரு விஷயத்தில் கீழ்ப்பட்டிருப்பது தெய்வீக சட்டத்தை மீறுவதில் விளைவடைவதாக இருக்குமானால், மனிதனுக்கல்ல, கடவுளுக்கே கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. அப்போதும்கூட ஒரு மனைவியின் உறுதியான நிலைநிற்கை “சாந்தமும் அமைதலுமுள்ள ஆவி”யினால் 1 பேதுரு 3:1-4) அவிசுவாசியான மனைவியை உடைய ஒரு கிறிஸ்தவ மனிதனின் விஷயத்திலும் இப்படியே இருக்கவேண்டும். பைபிள் நியமங்களுக்கு அவர் இணக்கமாயிருப்பது மேம்பட்ட ஒரு கணவனாக அவரை ஆக்கவேண்டும்.
பக்குவப்பட்டிருக்கவேண்டும். தேவனை அறியும் அறிவு ஒரு மேம்பட்ட மனைவியாக அவளை ஆக்கியிருப்பது தெளிவாக இருக்கவேண்டும். (16எபேசியர் 6:1 பிள்ளைகளின் பங்கை இவ்வாறு விவரித்துக் கூறுகிறது: “பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.” தாம் வளர்ந்து வருகையில் தம்முடைய பெற்றோருக்கு கீழ்ப்பட்டவராக நிலைத்திருந்த இயேசுவின் முன்மாதிரியை கிறிஸ்தவ பிள்ளைகள் பின்பற்றுகின்றனர். கீழ்ப்படிதலுள்ள ஒரு பையனாக, அவர் “ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.”—லூக்கா 2:51, 52.
17பெற்றோர் தங்கள் பொறுப்புகளைக் கையாளும் விதமானது, அவர்களுடைய பிள்ளைகள் அதிகாரத்தை மதிப்பார்களா அல்லது அதற்கு எதிராக கலகம் செய்வார்களா என்பதன்பேரில் செல்வாக்கு செலுத்தக்கூடும். (நீதிமொழிகள் 22:6) ஆகவே பெற்றோர் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளலாம், ‘நான் என்னுடைய அதிகாரத்தை அன்பாக உபயோகிக்கிறேனா அல்லது கடுமையாக உபயோகிக்கிறேனா? நான் கண்டிப்பு இல்லாதவராக இருக்கிறேனா?’ தேவபக்தியுள்ள பெற்றோர் அன்பாகவும் கரிசனையாகவும் இருக்கும்படியும், அதே சமயத்தில் தெய்வீக நியமங்களைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருக்கும்படியும் எதிர்பார்க்கப்படுகிறார். பொருத்தமாகவே பவுல் எழுதினார்: “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.”—எபேசியர் 6:4; கொலோசெயர் 3:21.
18பெற்றோர், விசேஷமாக தங்கள் பிள்ளைகள் கீழ்ப்படிதலுள்ளவர்களாக இருந்து அவர்களுக்கு சந்தோஷத்தைக் கொண்டுவரவேண்டும் என்று விரும்புவார்களேயானால் தங்கள் பயிற்றுவிப்பு முறைகளை ஆழ்ந்து பரிசோதனை செய்துபார்க்க வேண்டும். (நீதிமொழிகள் 23:24, 25) பைபிளில், சிட்சை என்பது முக்கியமாக போதனையின் ஒரு வகையாகும். (நீதிமொழிகள் 4:1; 8:33) அது அன்போடும் சாந்தத்தோடும் சம்பந்தப்பட்டிருக்கிறது, கோபத்தோடும் முரட்டுத்தனத்தோடும் அல்ல. ஆகவே, கிறிஸ்தவ பெற்றோர் ஞானத்தோடு செயல்பட்டு தங்கள் பிள்ளைகளைச் சிட்சிக்கும்போது தங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது அவசியமாகும்.—நீதிமொழிகள் 1:7.
சபையில் அதிகாரம்
19யெகோவா ஒரு ஒழுங்குள்ள கடவுளாக இருப்பதன் காரணமாக, தம்முடைய மக்களுக்கு அவர் அதிகாரமுள்ள மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தலைமைத்துவத்தை அளிப்பார் என்பது நியாயமாகவே இருக்கிறது. இதற்கிசைவாக, அவர் இயேசுவை கிறிஸ்தவ சபையின் தலைவராக நியமித்திருக்கிறார். (1 கொரிந்தியர் 14:33, 40, NW; எபேசியர் 1:20-23) கிறிஸ்துவின் காணக்கூடாத தலைமைத்துவத்தின்கீழ், ஒவ்வொரு சபையிலும் நியமிக்கப்பட்ட மூப்பர்கள் மந்தையை ஆர்வத்தோடும், மனமுவந்தும் அன்பாகவும் மேய்க்கும் ஒரு ஏற்பாட்டுக்கு கடவுள் அதிகாரமளித்திருக்கிறார். (1 பேதுரு 5:2, 3) உதவி ஊழியர்கள் அவர்களுக்குப் பல்வேறு விதங்களில் உதவிசெய்து சபையினுள் மதிப்புவாய்ந்த சேவையைச் செய்கின்றனர்.—பிலிப்பியர் 1:1.
20கிறிஸ்தவ மூப்பர்களைக் குறித்து பவுல் எழுதினார்: “உங்களை நடத்துகிறவர்கள் உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.” (எபிரெயர் 13:17) ஞானமாகவே, சபையிலுள்ளவர்களின் ஆவிக்குரிய தேவைகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை கிறிஸ்தவ கண்காணிகளிடம் கடவுள் ஒப்படைத்திருக்கிறார். இந்த மூப்பர்கள் ஒரு குருக்கள் வகுப்பை உண்டுபண்ணுவதில்லை. அவர்கள் கடவுளுக்கு ஊழியக்காரரும் அடிமைகளுமாயிருந்து, நம்முடைய எஜமானராகிய இயேசு கிறிஸ்து செய்தது போலவே, தங்கள் உடன் வணக்கத்தாரின் தேவைகளைப் பூர்த்திசெய்ய ஊழியம் செய்து வருகிறார்கள். (யோவான் 10:14, 15) வேதப்பூர்வமான தகுதியுடைய இந்த ஆண்கள் நம்முடைய முன்னேற்றத்திலும் ஆவிக்குரிய வளர்ச்சியிலும் அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை அறிந்திருப்பது நாம் ஒத்துழைக்கிறவர்களாயும் கீழ்ப்படிதலுள்ளவர்களாயும் இருக்க நம்மை உற்சாகப்படுத்துகிறது.—1 கொரிந்தியர் 16:16.
21சில சமயங்களில், ஆடுகள் வழிதவறிப் போகவோ அல்லது தீங்கிழைக்கும் உலகப்பிரகாரமான காரியங்களால் ஆபத்திற்குள்ளாகவோ கூடும். பிரதான மேய்ப்பரின் தலைமைத்துவத்தின்கீழ், உதவி மேய்ப்பர்களாக மூப்பர்கள் தங்கள் பொறுப்பிலுள்ளவர்களின் தேவைகளுக்கு விழிப்புள்ளவர்களாயிருந்து, அவர்களுக்குத் தனிப்பட்ட கவனத்தை ஊக்கம் தளராது கொடுக்கின்றனர். (1 பேதுரு 5:4) அவர்கள் சபையின் அங்கத்தினர்களைச் சென்று சந்தித்து உற்சாகமூட்டும் வார்த்தைகளை அளிக்கிறார்கள். பிசாசு கடவுளுடைய மக்களின் சமாதானத்தைக் குலைத்துப்போட நாடுவதை அறிந்தவர்களாய், மூப்பர்கள் எந்தப் பிரச்சினையையும் கையாளும்போது பரத்திலிருந்து வரும் ஞானத்தை அப்பியாசிக்கின்றனர். (யாக்கோபு 3:17, 18) இயேசுதாமே ஜெபித்த அந்த ஐக்கியத்தையும் விசுவாசத்தின் ஒருமைப்பாட்டையும் காத்துக்கொள்ள அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள்.—யோவான் 17:20-22; 1 கொரிந்தியர் 1:10.
22ஒரு கிறிஸ்தவன் தீமையை அனுபவித்துக் கொண்டிருந்தால் அல்லது ஒரு பாவத்தைச் செய்துவிடுவதன் காரணமாக ஊக்கமிழந்துவிட்டிருந்தால் அப்போது என்ன? இதமான பைபிள் புத்திமதியும் அவருக்காக மூப்பர்கள் செய்யும் இருதயப்பூர்வமான ஜெபங்களும் ஆவிக்குரிய ஆரோக்கியத்தைத் திரும்பப்பெற அவருக்கு உதவக்கூடும். (யாக்கோபு 5:13-15) பரிசுத்த ஆவியால் நியமிக்கப்பட்டுள்ள இந்த மனிதர்கள் தவறுசெய்யும் போக்கில் சென்றுகொண்டிருக்கும் எவருக்கும் அல்லது சபையின் ஆவிக்குரிய மற்றும் ஒழுக்க சுத்தத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எவருக்கும் சிட்சை அளிக்கவும் கடிந்துகொள்ளவும்கூட அதிகாரம் பெற்றிருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 20:28; தீத்து 1:9; 2:15) சபையை சுத்தமாக வைத்துக்கொள்வதற்காக, வினைமையான தவறுகளைக்குறித்து தனிநபர்கள் தெரிவிக்கவேண்டியது அவசியமாக இருக்கலாம். (லேவியராகமம் 5:1) மோசமான ஒரு பாவத்தைச் செய்துவிடும் ஒரு கிறிஸ்தவன் வேதப்பூர்வமான சிட்சையையும் கடிந்துகொள்ளுதலையும் ஏற்றுக்கொண்டு உண்மையான மனந்திரும்புதலுக்குரிய அத்தாட்சியை காட்டுவாரேயானால், அவர் உதவிசெய்யப்படுவார். நிச்சயமாகவே, கடவுளுடைய சட்டத்தைப் பிடிவாதமாகவும் மனந்திரும்பாலும் மீறிக்கொண்டிருப்பவர்கள் சபை நீக்கம் செய்யப்படுகின்றனர்.—1 கொரிந்தியர் 5:9-13.
23ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின்கீழ், ஆவிக்குரிய விதமாக முதிர்ச்சியுள்ள மனிதர்கள் கடவுளுடைய மக்களுக்கு ஆறுதலையும், பாதுகாப்பையும் புத்துணர்ச்சியையும் அளிப்பதற்காக நியமிக்கப்படுவர் என்பதாக பைபிள் முன்னறிவித்திருந்தது. (ஏசாயா 32:1, 2) ஆவிக்குரிய வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக அவர்கள் சுவிசேஷகர்களாகவும், மேய்ப்பர்களாகவும், போதகர்களாகவும் முன்சென்று நடத்துவர். (எபேசியர் 4:11, 12, 16) கிறிஸ்தவக் கண்காணிகள் சில சமயங்களில் உடன்விசுவாசிகளைக் கடிந்துகொண்டு, கண்டனம்செய்து புத்திமதி கூறினாலும், கடவுளுடைய வார்த்தையை அடிப்படையாகக் கொண்ட மூப்பர்களின் ஆரோக்கியமான போதனையைப் பொருத்துவது எல்லாரும் ஜீவனுக்குப் போகிற வழியில் நிலைத்திருப்பதற்கு உதவிசெய்கிறது.—நீதிமொழிகள் 3:11, 12; 6:23; தீத்து 2:1.
அதிகாரத்தைப்பற்றிய யெகோவாவின் நோக்குநிலையை ஏற்றுக்கொள்ளுங்கள்
24முதல் மனுஷனும் மனுஷியும் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருக்கும் விஷயத்தின்பேரில் சோதிக்கப்பட்டார்கள். இதேப்போன்ற ஒரு சோதனையை நாம் தினந்தோறும் எதிர்ப்படுவதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. பிசாசாகிய சாத்தான் மனிதவர்க்கத்தின் மத்தியில் கலகத்தனமான ஒரு ஆவியை வளர்த்துவந்திருக்கிறான். (எபேசியர் 2:2) கீழ்ப்படிதலைக் காட்டிலும் தன்னிஷ்டப்படி நடப்பது கவர்ச்சியூட்டும் வண்ணம் உயர்ந்ததாகத் தோன்றும்படியாகச் செய்யப்பட்டிருக்கிறது.
25என்றபோதிலும், நாம் உலகத்தினுடைய கலகத்தனமான ஆவியை நிராகரித்துவிட வேண்டும். அப்படிச் செய்யும்போது, தெய்வீக கீழ்ப்படிதல் மிகுதியான ஆசீர்வாதங்களைக் கொண்டுவருவதை நாம் காண்போம். உதாரணமாக, உலகப்பிரகாரமான அதிகாரிகளிடமிருந்து தொந்தரவை வரவழைத்துக்கொள்ளும்விதமாக நடந்துகொள்பவர்களுக்கு கவலைகளையும் ஏமாற்றங்களையும் நாம் தவிர்த்துவிடுவோம். அநேக குடும்பங்களில் பரவியுள்ள பிணக்கங்களை நாம் குறைத்துவிடுவோம். நம்முடைய கிறிஸ்தவ உடன் விசுவாசிகளோடு கனிவான, அன்புள்ள கூட்டுறவின் நன்மைகளை நாம் அனுபவித்து மகிழ்வோம். எல்லாவற்றுக்கும் மேலாக, நம்முடைய தெய்வீக கீழ்ப்படிதல் உன்னத அதிகாரியான யெகோவாவோடு ஒரு நல்ல உறவை விளைவிக்கும்.
உங்கள் அறிவை சோதித்துப்பாருங்கள்
யெகோவா எவ்விதமாக தம்முடைய அதிகாரத்தை அப்பியாசிக்கிறார்?
‘மேலான அதிகாரங்கள்’ எவை, நாம் அவற்றிற்கு கீழ்ப்பட்டிருப்பது எவ்விதம்?
தலைமைத்துவ நியமம் ஒவ்வொரு குடும்ப அங்கத்தினர்மீதும் என்ன உத்தரவாதத்தை வைக்கிறது?
கிறிஸ்தவ சபையில் நாம் எவ்வாறு கீழ்ப்படிதலைக் காண்பிக்கலாம்?
[கேள்விகள்]
1, 2. எல்லா வகையான அதிகாரங்களுமே தீங்கிழைப்பதாக இருக்கிறதா? விளக்கவும்.
3. யெகோவா ஏன் சரியாகவே ‘உன்னத அரசதிகாரமுள்ள ஆண்டவர்,’ என்பதாக அழைக்கப்படுகிறார்?
4. யெகோவா தம்முடைய அதிகாரத்தை எவ்விதமாக அப்பியாசிக்கத் தெரிந்துகொள்கிறார்?
5. யெகோவாவின் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருப்பது ஏன் கடினமாக இல்லை?
6. ஏதேன் தோட்டத்தில் எவ்விதமாக அதிகாரத்தைப் பற்றிய பிரச்சினை எழும்பியது, என்ன விளைவோடு?
7. ‘மேலான அதிகாரங்கள்’ எவை, அவற்றின் ஸ்தானம் கடவுளுடைய அதிகாரத்துடன் எவ்விதமாக சம்பந்தப்பட்டிருக்கிறது?
8. மேலான அதிகாரங்களிடமிருந்து நீங்கள் எவ்விதமாக நன்மையடைகிறீர்கள், அவற்றிற்கு உங்களுடைய கீழ்ப்படிதலை நீங்கள் எவ்வாறு காண்பிக்கலாம்?
9, 10. (அ) மேலான அதிகாரங்கள் எவ்விதமாக கடவுளுடைய ஏற்பாட்டுக்குள் பொருந்துகின்றன? (ஆ) மேலான அதிகாரங்களை எதிர்ப்பது ஏன் தவறாக இருக்கும்?
11. தலைமைத்துவ நியமத்தை நீங்கள் எவ்வாறு விளக்குவீர்கள்?
12, 13. குடும்பத்தின் தலைவர் யார், தலைமைத்துவத்தை இயேசு அப்பியாசிக்கும் முறையிலிருந்து என்ன கற்றுக்கொள்ளப்படலாம்?
14, 15. தேவனை அறியும் அறிவு எவ்விதமாக தன்னுடைய கணவனுக்குக் கீழ்ப்பட்டிருக்க ஒரு மனைவிக்கு உதவி செய்கிறது?
16. இயேசு இளைஞராயிருந்த போது வைத்த முன்மாதிரியைப் பிள்ளைகள் எவ்வாறு பின்பற்றலாம்?
17. பெற்றோர் தங்கள் அதிகாரத்தைச் செலுத்தும் விதம் அவர்களுடைய பிள்ளைகள்மீது என்ன பாதிப்பை உடையதாக இருக்கக்கூடும்?
18. பெற்றோரின் சிட்சை எவ்விதமாக கொடுக்கப்பட வேண்டும்?
19. கிறிஸ்தவ சபையில் நல்ல ஒழுங்குக்காக கடவுள் எவ்வாறு ஏற்பாடு செய்திருக்கிறார்?
20. நியமிக்கப்பட்ட கிறிஸ்தவ மூப்பர்களுக்கு நாம் ஏன் கீழ்ப்பட்டிருக்க வேண்டும், இது ஏன் பிரயோஜனமாயிருக்கிறது?
21. நியமிக்கப்பட்ட மூப்பர்கள் எவ்விதமாக உடன் கிறிஸ்தவர்களுக்கு ஆவிக்குரிய விதமாக உதவிசெய்ய நாடுகிறார்கள்?
22. தவறு செய்தல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மூப்பர்கள் என்ன உதவியை அளிக்கிறார்கள்?
23. சபையின் நன்மைக்காக கிறிஸ்தவக் கண்காணிகள் எவற்றை அளிக்கின்றனர்?
24. எந்த விஷயத்தின் பேரில், நாம் தினந்தோறும் சோதிக்கப்படுகிறோம்?
25. உலகத்தினுடைய கலகத்தனமான ஆவியை நிராகரித்து கடவுள் அப்பியாசிக்கும் அல்லது அனுமதிக்கும் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருப்பதால் கிடைக்கும் நன்மைகள் யாவை?
SUBMISSIVE, NOT SUBVERSIVE
கவிழ்க்கிறவர்கள் அல்லர், கீழ்ப்படிகிறவர்கள்
தங்களுடைய பொதுப் பிரசங்க வேலையின் மூலமாக, யெகோவாவின் சாட்சிகள் உண்மையான சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் மனிதவர்க்கத்தின் ஒரே நம்பிக்கை கடவுளுடைய ராஜ்யமே என்று சுட்டிக்காட்டி வருகிறார்கள். ஆனால் கடவுளுடைய ராஜ்யத்தின் இந்த வைராக்கியமான அறிவிப்பாளர்கள் நிச்சயமாகவே அவர்கள் எந்த அரசாங்கங்களின்கீழ் வாழ்ந்து வருகிறார்களோ அந்த அரசாங்கங்களை கவிழ்க்கிறவர்கள் அல்லர். அதற்கு எதிர்மாறாக, சாட்சிகள் மிகவும் மரியாதையுள்ளவர்களாகவும் சட்டத்தின்படி வாழும் குடிமக்களாகவும் இருக்கின்றனர். “எல்லா மதப் பிரிவுகளும் யெகோவாவின் சாட்சிகளைப் போல இருந்தால், நம்மிடையே எந்தக் கொலையோ, திருட்டுக்களோ, குற்றச்செயல்களோ, சிறைக் கைதிகளோ, அணுகுண்டுகளோ இருக்காது. கதவுகள் ஒருபோதும் பூட்டப்படாமல் இருக்கும்,” என்பதாக ஆப்பரிக்க தேசத்தில் உள்ள அதிகாரி ஒருவர் சொன்னார்.
இதை உணர்ந்தவர்களாய், அநேக தேசங்களிலுள்ள அதிகாரிகள் சாட்சிகளின் பிரசங்க வேலை தடையில்லாமல் செய்யப்படும்படி அனுமதித்திருக்கின்றனர். மற்ற தேசங்களில், யெகோவாவின் சாட்சிகள் நன்மைக்கான செல்வாக்காக இருப்பதை அதிகாரிகள் உணர்ந்தபோது தடையுத்தரவுகள் அல்லது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருக்கின்றன. மேலான அதிகாரங்களுக்குக் கீழ்ப்படிவதைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் எழுதிய விதமாகவே இது இருக்கிறது: “நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும்.”—ரோமர் 13:1, 3.