கடவுளை என்றென்றுமாக சேவிப்பதை உங்களுடைய குறிக்கோளாக்குங்கள்
அதிகாரம் 18
கடவுளை என்றென்றுமாக சேவிப்பதை உங்களுடைய குறிக்கோளாக்குங்கள்
மிகுதியான பொக்கிஷங்கள் அடங்கிய ஒரு அறையின் பூட்டப்பட்ட கதவுக்கு முன்னால் நீங்கள் நிற்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். அதிகாரமுள்ள ஒரு நபர் உங்களிடம் சாவியைக் கொடுத்து இந்த விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்துக்கொள்ளும்படியாக உங்களிடம் சொல்வதாக வைத்துக்கொள்வோம். அந்தச் சாவியை நீங்கள் பயன்படுத்தினாலொழிய அதனால் உங்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அதேவிதமாகவே, அறிவு உங்களுக்குப் பயனுள்ளதாயிருக்க வேண்டுமானால் அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
2இது தேவனை அறியும் அறிவின் விஷயத்தில் விசேஷமாக உண்மையாய் இருக்கிறது. ஆம், யெகோவா தேவன் மற்றும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய திருத்தமான அறிவு நித்திய ஜீவனை அர்த்தப்படுத்துகிறது. (யோவான் 17:3) என்றபோதிலும், வெறுமனே அறிவைப் பெற்றிருப்பதன் மூலமாக அந்த எதிர்பார்ப்பின் நிறைவேற்றத்தை அனுபவித்துவிட முடியாது. மதிப்புள்ள ஒரு சாவியை நீங்கள் பயன்படுத்துகையில் தேவனை அறியும் அறிவை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பொருத்திப் பிரயோகிப்பது அவசியமாகும். கடவுளுடைய சித்தத்தை செய்கிறவர்கள் ‘ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள்,’ என்பதாக இயேசு சொன்னார். இப்படிப்பட்டவர்கள் என்றென்றுமாக கடவுளைச் சேவிப்பதற்கு சிலாக்கியம் பெறுவர்!—மத்தேயு 7:21; 1 யோவான் 2:17.
3கடவுளுடைய சித்தம் என்ன என்பதைக் கற்றுக்கொண்ட பின்பு, அதைச் செய்வது இன்றியமையாததாகும். உங்களுக்கான கடவுளுடைய சித்தம் என்ன என்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்? பின்வரும் இந்த வார்த்தைகளில் பொருத்தமாகவே இது சுருக்கிக்கூறப்படலாம்: இயேசுவைப் பின்பற்றுங்கள். ஒன்று பேதுரு 2:21 நமக்குச் சொல்கிறது: “இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி, உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.” அப்படியென்றால், கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கு, இயேசுவின் முன்மாதிரியை உங்களால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு நெருக்கமாக பின்பற்றுவது அவசியமாகும். இப்படித்தான் நீங்கள் தேவனை அறியும் அறிவை பொருத்திப் பிரயோகிக்கிறீர்கள்.
இயேசு எவ்விதமாக தேவனை அறியும் அறிவைப் பயன்படுத்தினார்
4இயேசு கிறிஸ்து மற்றவர்களைவிட தேவனைப் பற்றி அதிக திருத்தமான அறிவை உடையவராக இருக்கிறார். பூமிக்கு வருவதற்கு முன்னால் பல யுகங்களாக அவர் பரலோகத்தில் யெகோவா தேவனோடு வாழ்ந்தும் வேலைசெய்தும் வந்தார். (கொலோசெயர் 1:15, 16) அந்த எல்லா அறிவையும் வைத்து இயேசு என்ன செய்தார்? வெறுமனே அதைப் பெற்றிருப்பதில் அவர் திருப்தியாக இருந்துவிடவில்லை. அதற்கேற்ப அவர் வாழ்ந்தார். அதன் காரணமாகவே அவர் உடன் மானிடரோடு அவருடைய செயல்தொடர்புகளில் அவ்வளவு தயவாயும் பொறுமையாயும் அன்பாயுமிருந்தார். இவ்விதமாக இயேசு தம்முடைய பரலோக தந்தையைப் பின்பற்றி யெகோவாவின் வழிகளையும் ஆளுமையையும் பற்றிய தம்முடைய அறிவுக்கு இசைவாக செயல்பட்டுக்கொண்டிருந்தார்.—யோவான் 8:23, 28, 29, 38; 1 யோவான் 4:8.
5இயேசு பெற்றிருந்த அறிவானது மிகவும் முக்கியமான ஒரு படியை எடுப்பதற்கும்கூட அவரை உந்துவித்திருந்தது. அவர் கலிலேயாவிலிருந்து யோர்தான் நதிக்கு வந்தார், அங்கே யோவான் அவரை முழுக்காட்டினார். (மத்தேயு 3:13-15) இயேசுவின் முழுக்காட்டுதல் எதை அடையாளப்படுத்தியது? ஒரு யூதனாக, அவர் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருந்த ஒரு தேசத்தில் பிறந்திருந்தார். ஆகவே, இயேசு பிறப்பு முதற்கொண்டு ஒப்புக்கொடுக்கப்பட்டவராக இருந்தார். (யாத்திராகமம் 19:5, 6) முழுக்காட்டுதலுக்குத் தம்மைக் கீழ்ப்படுத்துவதன் மூலம், அந்தச் சமயத்தில் அவருக்கான தெய்வீக சித்தத்தைச் செய்வதற்காக யெகோவாவுக்குத் தம்மை அளித்துக்கொண்டிருந்தார். (எபிரெயர் 10:5, 7) மேலும் இயேசு தம்முடைய முழுக்காட்டுதலின் பொருளுக்கேற்ப வாழ்ந்தார். யெகோவாவின் சேவையில் அவர் தம்மை மும்முரமாக ஈடுபடுத்திக்கொண்டு, தேவனை அறியும் அறிவை மக்களோடு ஒவ்வொரு சந்தர்ப்பதிலும் பகிர்ந்துகொண்டார். இயேசு கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் மகிழ்ச்சியைக் கண்டு, இது அவருக்கு உணவைப் போல இருப்பதாகவும்கூட சொன்னார்.—யோவான் 4:34.
6யெகோவாவின் சித்தத்தைச் செய்வது பெரும் தியாகத்தை உட்படுத்துவதாக—அவருடைய ஜீவனையேகூட அவர் இழப்பதை உட்படுத்துவதாக—இருக்கும் என்பதை இயேசு முழுமையாக உணர்ந்திருந்தார். என்றபோதிலும், இயேசு தம்மைத்தாமே சொந்தம் கைவிட்டு, தம்முடைய
தனிப்பட்ட தேவைகளை இரண்டாம் இடத்தில் வைத்தார். கடவுளுடைய சித்தத்தைச் செய்வது எப்போதும் முதலிடத்தை வகித்தது. இந்த அம்சத்தில், இயேசுவின் பரிபூரண முன்மாதிரியை நாம் எவ்வாறு பின்பற்றலாம்?நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற படிகள்
7இயேசுவைப் போலில்லாமல், நாம் அபூரணராயிருக்கிறோம், நாம் இன்றியமையாத மற்ற படிகளை எடுத்தபின்தானே முழுக்காட்டுதலின் மைல்கல்லை எட்டமுடியும். யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றிய திருத்தமான அறிவை நம்முடைய இருதயத்திற்குள் எடுத்துக்கொள்வதன் மூலமாக இது ஆரம்பமாகிறது. இதைச் செய்வது விசுவாசத்தை அப்பியாசிக்கவும் கடவுளிடம் ஆழமான அன்பைக் கொண்டிருக்கவும் நம்மைச் செய்விக்கிறது. (மத்தேயு 22:37-40; ரோமர் 10:17; எபிரெயர் 11:6) கடவுளுடைய சட்டங்கள், நியமங்கள் மற்றும் தராதரங்களோடு இணக்கமாயிருப்பது மனந்திரும்பவும் நம்முடைய கடந்தகால பாவங்களைக் குறித்து தெய்வீக துக்கத்தை வெளிப்படுத்தவும் நம்மைத் தூண்டவேண்டும். இது குணப்படுவதற்கு, அதாவது, முழுவதுமாக மனந்திரும்பி, தேவனை அறியும் அறிவைப் பெறுவதற்கு முன்னால் நாம் பின்பற்றிவந்த எந்தத் தவறான போக்கையும் கைவிடுவதற்கு வழிநடத்துகிறது. (அப்போஸ்தலர் 3:19) இயல்பாகவே, நீதியானவற்றைச் செய்வதற்குப் பதிலாக நாம் இன்னும் இரகசியமாக ஏதோ ஒரு பாவத்தை வழக்கமாகச் செய்துகொண்டிருந்தால், நாம் உண்மையில் குணப்படவுமில்லை அல்லது கடவுளை ஏமாற்றிவிடவும் இல்லை. யெகோவா எல்லா மாய்மாலத்தையும் கண்டுபிடித்துவிடுகிறார்.—லூக்கா 12:2, 3.
8நீங்கள் தேவனை அறியும் அறிவை எடுத்துவந்திருப்பதால், இப்பொழுது ஆவிக்குரிய காரியங்கள் தனிப்பட்டவராக உங்களுக்கு பொருந்தும் விதத்தை சிந்தித்துப்பார்ப்பது பொருத்தமாக இல்லையா? ஒருவேளை நீங்கள் கற்றுக்கொள்ளும் காரியங்களைப் பற்றி உங்கள் உறவினர்கள், நண்பர்கள் இன்னும் மற்றவர்களிடம் சொல்வதற்கு நீங்கள் ஆவலாயிருக்கலாம். உண்மையில் இதை நீங்கள் ஏற்கெனவே செய்துகொண்டிருக்கலாம். தற்செயலாக அமைந்த சந்தர்ப்பங்களில் இயேசு நற்செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டதுபோலவே நீங்கள் செய்துகொண்டிருக்கலாம். (லூக்கா 10:38, 39; யோவான் 4:6-15) இப்பொழுது நீங்கள் அதிகத்தைச் செய்ய விரும்பலாம். யெகோவாவின் சாட்சிகளுடைய வழக்கமான ராஜ்ய பிரசங்கிப்பு நடவடிக்கையில் ஒரு பங்கைக் கொண்டிருப்பதற்கு நீங்கள் தகுதியுள்ளவர்களாக இருக்கிறீர்களா, உங்களால் அதைச் செய்ய முடியுமா என்பதைத் தீர்மானிக்கும் பொருட்டு கிறிஸ்தவ மூப்பர்கள் உங்களோடு பேச மகிழ்ச்சியுள்ளவர்களாக இருப்பார்கள். நீங்கள் அப்படியிருந்தால், ஊழியத்தில் ஒரு சாட்சியோடு செல்வதற்கு மூப்பர்கள் ஏற்பாடுகள் செய்வர். ஒரு ஒழுங்கான முறையில் தங்கள் ஊழியத்தை நிறைவேற்றும் பொருட்டு இயேசுவின் சீஷர்கள் அவருடைய அறிவுரைகளைப் பின்பற்றினார்கள். (மாற்கு 6:7, 30; லூக்கா 10:1) வீட்டுக்கு வீடாகவும் மற்ற வழிகளிலும் ராஜ்ய செய்தியைப் பரப்புவதில் பங்குகொள்ளும்போது இதே போன்ற உதவியிலிருந்து நீங்கள் நன்மையடைவீர்கள்.—அப்போஸ்தலர் 20:20, 21.
9சபையின் பிராந்தியத்திலுள்ள எல்லா வகையான ஆட்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கிப்பது நீதியினிடமாக மனச்சாய்வுள்ள ஆட்களைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு வழியாகவும் உங்களுக்கு விசுவாசம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் நற்கிரியையாகவும் இருக்கிறது. (அப்போஸ்தலர் 10:34, 35; யாக்கோபு 2:17, 18, 26) கிறிஸ்தவக் கூட்டங்களில் ஒழுங்காக ஆஜராயிருப்பதும் பிரசங்க வேலையில் அர்த்தமுள்ள ஒரு பங்கைக் கொண்டிருப்பதும்கூட நீங்கள் மனந்திரும்பி குணப்பட்டிருப்பதையும் இப்பொழுது தேவனை அறியும் அறிவுக்கு இசைவாக வாழ நீங்கள் தீர்மானமாயிருப்பதையும் காண்பிப்பதற்கான வழிகளாகும். நியாயமான அடுத்த படி என்ன? அது யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுத்தலைச் செய்வதாகும். இது இருதயப்பூர்வமான ஜெபத்தில் அவருடைய சித்தத்தைச் செய்வதற்காக நீங்கள் மனமுவந்தும் முழு இருதயத்தோடும் உங்களுடைய வாழ்க்கையை கடவுளுக்குக் கொடுக்கிறீர்கள் என்பதாக அவரிடம் சொல்வதை அர்த்தப்படுத்துகிறது. இதுதானே யெகோவாவுக்கு உங்களையே ஒப்புக்கொடுப்பதற்கும் இயேசு கிறிஸ்துவின் தயவான நுகத்தை ஏற்றுக்கொள்வதற்குமுரிய வழியாகும்.—மத்தேயு 11:29, 30.
முழுக்காட்டுதல்—அது உங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது
10இயேசுவின் பிரகாரம், அவருக்கு சீஷராகும் அனைவரும் முழுக்காட்டப்பட வேண்டும். (மத்தேயு 28:19, 20) கடவுளுக்கு உங்களை ஒப்புக்கொடுத்தப்பின்பு இது ஏன் அவசியமாக இருக்கிறது? உங்களையே யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதால், நீங்கள் அவரை நேசிப்பதை அவர் அறிவார். ஆனால் கடவுளிடமாக உங்களுக்கிருக்கும் அன்பை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக நீங்கள் கூடுதலான நடவடிக்கை எடுக்க விரும்புவீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆம், முழுக்காட்டுதல் யெகோவா தேவனுக்கு நீங்கள் செய்திருக்கும் ஒப்புக்கொடுத்தலை பகிரங்கமாக தெரியப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது.—ரோமர் 10:9, 10.
11முழுக்காட்டுதல் அதிகமான அடையாள அர்த்தத்தையுடையதாக இருக்கிறது. நீங்கள் மூழ்கும்போது அல்லது தண்ணீருக்குக் கீழே ‘புதைக்கப்படும்போது’ அது உங்களுடைய முந்தைய வாழ்க்கை முறைக்கு இறந்துவிட்டது 1 பேதுரு 3:21.
போல இருக்கிறது. தண்ணீரிலிருந்து நீங்கள் வெளியே வரும்போது, புதிய ஒரு வாழ்க்கைக்காக வெளியே வருவது போல இருக்கிறது, அது உங்களுடைய விருப்பத்தால் அல்ல, கடவுளுடைய விருப்பத்தால் கட்டுப்படுத்தப்படும் ஒரு வாழ்க்கையாகும். நிச்சயமாகவே இனிமேல் நீங்கள் எந்தத் தவறுகளையும் செய்யமாட்டீர்கள் என்பதை அது அர்த்தப்படுத்தாது, ஏனென்றால் நாம் அனைவரும் அபூரணராக இருக்கிறோம், ஆகவே தினந்தோறும் பாவம் செய்கிறோம். என்றபோதிலும், ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட யெகோவாவின் ஒரு ஊழியராக, அவரோடு நீங்கள் விசேஷித்த ஒரு உறவுக்குள் பிரவேசித்துவிட்டிருப்பீர்கள். உங்கள் மனந்திரும்புதலின் காரணமாகவும் முழுக்காட்டப்படுவதற்கு உங்களை நீங்கள் மனத்தாழ்மையுடன் கீழ்ப்படுத்துவதன் காரணமாகவும், இயேசுவினுடைய மீட்கும் பலியின் அடிப்படையில் யெகோவா உங்களுடைய பாவங்களை மன்னிப்பதற்கு மனமுள்ளவராக இருக்கிறார். இவ்விதமாக முழுக்காட்டுதல் கடவுளுக்கு முன்பாக சுத்தமான ஒரு மனச்சாட்சியுடனிருக்க வழிநடத்துகிறது.—12புதிய சீஷர்களை “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே” முழுக்காட்டும்படியாக இயேசு தம்மைப் பின்பற்றுவோருக்குக் கட்டளையிட்டார். (மத்தேயு 28:19) இயேசு எதை அர்த்தப்படுத்தினார்? ‘பிதாவின் நாமத்திலே’ முழுக்காட்டுதல் என்பது முழுக்காட்டப்படும் நபர் முழு இருதயத்தோடு யெகோவாவை படைப்பாளராகவும் சர்வலோகத்தின் உரிமையுள்ள உன்னத அரசதிகாரியாகவும் ஏற்றுக்கொள்வதைக் குறிப்பிடுகிறது. (சங்கீதம் 36:9; 83:17; பிரசங்கி 12:1) ‘குமாரனின் நாமத்திலே’ முழுக்காட்டப்படுவது என்பது அந்த நபர் இயேசு கிறிஸ்துவை—விசேஷமாக அவருடைய மீட்கும் பலியை—இரட்சிப்புகாக கடவுளால் அளிக்கப்படும் ஒரே வழிமூலமாக ஏற்றுக்கொள்வதை அர்த்தப்படுத்துகிறது. (அப்போஸ்தலர் 4:12) ‘பரிசுத்த ஆவியின் நாமத்திலே’ முழுக்காட்டுதல் என்பது முழுக்காட்டப்படும் நபர் யெகோவாவின் பரிசுத்த ஆவி அல்லது செயல்நடப்பிக்கும் சக்தியை, கடவுள் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கும் ஆவியால் வழிநடத்தப்படும் தம்முடைய அமைப்போடு கூட்டுறவுகொண்டு தம்முடைய நீதியுள்ள சித்தத்தை நிறைவேற்றுவதற்காக தம்முடைய ஊழியர்களுக்கு வல்லமையளிப்பதற்கும் பயன்படுத்தும் கருவியாக இருப்பதை ஏற்றுக்கொள்வதை அர்த்தப்படுத்துகிறது.—ஆதியாகமம் 1:2; சங்கீதம் 104:30; யோவான் 14:26; 2 பேதுரு 1:21.
நீங்கள் முழுக்காட்டுதலுக்குத் தயாராக இருக்கிறீர்களா?
13முழுக்காட்டுதல் என்பது அத்தனை அர்த்தமுள்ளதாகவும் ஒரு நபரின் வாழ்க்கையில் அதிமுக்கியமான ஒரு மைல்கல்லாகவும் இருப்பதால், அது
நீங்கள் பயப்பட வேண்டிய ஒரு படியா? நிச்சயமாகவே இல்லை! முழுக்காட்டப்படுவதற்கான தீர்மானம் இலேசான ஒன்றாக கருதப்படக் கூடாதென்றாலும், அதுவே நீங்கள் செய்யக்கூடிய மிக ஞானமான தீர்மானமாகும்.14முழுக்காட்டுதல் யெகோவா தேவனைச் சேவிக்க நீங்கள் தெரிவு செய்திருப்பதற்கு அத்தாட்சியை அளிக்கிறது. உங்களுக்குப் பழக்கமானவர்களைப் பற்றி யோசித்துப்பாருங்கள். ஏதாவது ஒரு வகையில் அவர்களில் ஒவ்வொருவரும் ஒரு எஜமானனுக்கு வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் அல்லவா? சிலர் செல்வங்களுக்கு அடிமையாகிறார்கள். (மத்தேயு 6:24) மற்றவர்கள் தங்கள் வாழ்க்கைத் தொழிலை ஊக்கமாக பின்தொடருகின்றனர் அல்லது தங்களுடைய சொந்த ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதையே தங்களுடைய வாழ்க்கையில் முக்கியமானதாக கருதுவதன் மூலம் தங்களையே சேவித்துக்கொள்கின்றனர். இன்னும் சிலர் பொய் கடவுட்களை சேவிக்கின்றனர். ஆனால் நீங்கள் உண்மையான கடவுளாகிய யெகோவாவை சேவிக்க தெரிந்துகொண்டிருக்கிறீர்கள். வேறு எவரும் இவ்வளவு தயவையும் இரக்கத்தையும் அன்பையும் காண்பிப்பது இல்லை. மனிதர்களை இரட்சிப்புக்கு வழிநடத்தும் ஒரு நோக்கமுள்ள வேலையினால் கடவுள் மனிதர்களை கண்ணியப்படுத்துகிறார். அவர் தம்முடைய ஊழியர்களுக்கு நித்திய ஜீவனைப் பலனாக அளிக்கிறார். நிச்சயமாகவே, இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி யெகோவாவுக்கு உங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணிப்பது பயப்படுவதற்குரிய ஒன்றல்ல. உண்மையில், அது மாத்திரமே கடவுளைப் பிரியப்படுத்துகிறது, மேலும் முற்றிலும் நியாயமாக இருக்கிறது.—1 இராஜாக்கள் 18:21.
15என்றபோதிலும், முழுக்காட்டுதல் என்பது அழுத்தத்தின் காரணமாக எடுக்கப்படவேண்டிய ஒரு படியுமல்ல. அது உங்களுக்கும் யெகோவாவுக்குமிடையே ஒரு தனிப்பட்ட விஷயமாக இருக்கிறது. (கலாத்தியர் 6:4) ஆவிக்குரிய முன்னேற்றத்தை நீங்கள் செய்கையில், நீங்கள் ஒருவேளை இவ்விதமாக யோசித்திருக்கலாம்: ‘நான் முழுக்காட்டப்படுவதற்குத் தடையென்ன?’ (அப்போஸ்தலர் 8:35, 36, NW) நீங்கள் உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம், ‘குடும்பத்தின் எதிர்ப்பு என்னைத் தடைசெய்கிறதா? நான் இன்னும் ஏதோவொரு வேதப்பூர்வமற்ற நிலைமைக்குள் அல்லது பாவமுள்ள பழக்கத்தில் உட்பட்டிருக்கிறேனா? சமுதாயத்தில் தயவை இழந்துவிடுவதைக் குறித்து நான் பயப்படுகிறேனா?’ சிந்திப்பதற்கு இவை சில விஷயங்களாகும், ஆனால் உண்மையில் உள்ளபடி இவற்றை மதிப்பிடுங்கள்.
16யெகோவாவைச் சேவிப்பதால் வரும் நன்மைகளைச் சிந்தியாமல் எதிர்மறையான காரியங்களை மதிப்பிடுவது நடைமுறைக்கு ஏற்றதாயில்லை. உதாரணமாக, குடும்பத்திலிருந்து வரும் எதிர்ப்பைப் பற்றி சிந்தித்துப்பாருங்கள். தம்மைப் பின்பற்றுவதால் அவருடைய சீஷர்கள் தங்களுடைய உறவினர்களை இழந்துபோனாலும்கூட, அவர்கள் பெரிய ஒரு ஆவிக்குரிய குடும்பத்தை மாற்கு 10:29, 30) இந்த உடன் விசுவாசிகள் சகோதர சிநேகத்தை உங்களுக்குக் காண்பித்து, துன்புறுத்தலைச் சகித்துக்கொள்ள உதவிசெய்து ஜீவனுக்குப் போகிற வழியில் உங்களுக்கு ஆதரவாயிருப்பர். (1 பேதுரு 5:9) விசேஷமாக சபை மூப்பர்கள் பிரச்சினைகளைச் சமாளிக்கவும் மற்ற சவால்களை வெற்றிகரமாக எதிர்ப்படவும் உங்களுக்கு உதவிசெய்யக்கூடும். (யாக்கோபு 5:14-16) இந்த உலகத்தில் ஆதரவை இழந்துபோவதைப்பற்றிய விஷயத்தில், ‘சர்வலோகத்தின் படைப்பாளருடைய அங்கீகாரத்தைக் கொண்டிருப்பதோடும் நான் தெரிந்துகொண்டிருக்கும் வாழ்க்கைப் போக்கின்மூலம் அவரைச் சந்தோஷப்படுத்துவதோடும் எதை ஒப்பிடமுடியும்?’ என்பதாக உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளலாம்.—நீதிமொழிகள் 27:11.
சம்பாதித்துக்கொள்வர் என்பதாக இயேசு வாக்களித்தார். (உங்களுடைய ஒப்புக்கொடுத்தல் மற்றும் முழுக்காட்டுதலுக்கேற்ப வாழ்தல்
17முழுக்காட்டுதல் என்பது உங்களுடைய ஆவிக்குரிய முன்னேற்றத்தின் முடிவாக இல்லை என்பதை நினைவில்கொள்வது முக்கியமாகும். நியமிக்கப்பட்ட ஊழியராகவும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராகவும் கடவுளுக்கு வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும் சேவையின் ஆரம்பத்தையே அது குறிக்கிறது. முழுக்காட்டுதல் இன்றியமையாத முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தாலும், அது இரட்சிப்புக்கு உத்தரவாதமளிப்பதில்லை. ‘முழுக்காட்டப்பட்ட எவரும் இரட்சிக்கப்படுவர்,’ என்பதாக இயேசு சொல்லவில்லை. அதற்குப் பதிலாக “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்,” என்பதாக அவர் சொன்னார். (மத்தேயு 24:13) ஆகவே, கடவுளுடைய ராஜ்யத்தை உங்களுடைய வாழ்க்கையில் பிரதான அக்கறைக்குரியதாக ஆக்குவதன் மூலம் நீங்கள் கடவுளுடைய ராஜ்யத்தை முதலாவது தேடுவது இன்றியமையாததாகும்.—மத்தேயு 6:25-34.
18யெகோவாவின் சேவையில் நிலைத்திருப்பதற்கு, நீங்கள் உங்களுக்காக ஆவிக்குரிய இலக்குகளை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவீர்கள். அவருடைய வார்த்தையை ஒழுங்காக தனிப்பட்டவிதமாக படிப்பதன் மூலம் தேவனை அறியும் உங்களுடைய அறிவை அதிகரிப்பது தகுதியான ஒரு இலக்காகும். தினந்தோறும் பைபிளை வாசிப்பதற்கு திட்டமிடுங்கள். (சங்கீதம் 1:1, 2) கிறிஸ்தவக் கூட்டங்களில் ஒழுங்காக ஆஜராயிருங்கள், ஏனென்றால் அங்கே நீங்கள் காணும் கூட்டுறவு ஆவிக்குரிய பலத்தை உங்களுக்கு அளிக்க உதவிசெய்யும். தனிப்பட்டவிதமாக, சபை கூட்டங்களில் குறிப்பு சொல்லி இவ்விதமாக யெகோவாவைத் துதிக்கவும் மற்றவர்களைக் கட்டியெழுப்பவும் நாடுவதை உங்கள் இலக்காக ஏன் ஆக்கிக்கொள்ளக்கூடாது? (ரோமர் 1:11, 12) உங்களுடைய ஜெபங்களின் தரத்தை மேம்படுத்துவது மற்றொரு இலக்காக இருக்கலாம்.—லூக்கா 11:2-4.
கலாத்தியர் 5:22, 23; 2 பேதுரு 3:11) பரிசுத்த ஆவிக்காக ஜெபித்து அவருடைய உண்மையுள்ள ஊழியராக அவருக்குக் கீழ்ப்படிகிறவர்கள் அனைவருக்கும் யெகோவா தம் பரிசுத்த ஆவியைத் தருகிறார் என்பதை நினைவில் வையுங்கள். (லூக்கா 11:13; அப்போஸ்தலர் 5:32) ஆகவே கடவுளிடம் அவருடைய ஆவிக்காக ஜெபித்து அவரைப் பிரியப்படுத்துகிற பண்புகளை வெளிப்படுத்துவதற்கு உதவிக்காக அவரிடம் கேளுங்கள். கடவுளுடைய ஆவியின் செல்வாக்குக்கு நீங்கள் பிரதிபலிக்கையில் இப்படிப்பட்ட பண்புகள் உங்களுடைய நடத்தையிலும் பேச்சிலும் அதிக தெளிவாக காணப்படும். நிச்சயமாகவே, கிறிஸ்தவ சபையிலுள்ள ஒவ்வொரு தனிநபரும் மேலுமதிகமாக கிறிஸ்துவைப் போல ஆவதற்காக ‘புதிய ஆளுமையை’ வளர்த்துக்கொள்வதற்கு பாடுபடுகிறார். (கொலோசெயர் 3:9-14, NW) நம்மில் ஒவ்வொருவரும் இதைச் செய்வதில் வித்தியாசமான சவால்களை எதிர்ப்படுகிறோம், ஏனென்றால் நாம் ஆவிக்குரிய முன்னேற்றத்தின் வித்தியாசப்பட்ட கட்டங்களில் இருக்கிறோம். நீங்கள் அபூரணராக இருப்பதன் காரணமாக, கிறிஸ்துவைப் போன்ற ஒரு ஆளுமையைக் கொண்டிருப்பதற்கு கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் ஒருபோதும் மனமுறிவடைந்துவிடாதீர்கள், ஏனென்றால் கடவுளுடைய உதவியோடு இது கூடிய காரியமாகும்.
19உங்களுடைய முழுக்காட்டுதலின் பொருளுக்கேற்ப நீங்கள் வாழவேண்டுமென்றால், நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இடைவிடாத கவனம் செலுத்தி, கடவுளுடைய பரிசுத்த ஆவி உங்களில், அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் போன்ற பண்புகளைப் பிறப்பிக்க அனுமதிப்பது அவசியமாகும். (20இயேசுவின் சந்தோஷமுள்ள முன்மாதிரியை அதிக நெருக்கமாக பின்பற்றுவது உங்களுடைய ஆவிக்குரிய இலக்குகளில் ஒன்றாக இருக்கவேண்டும். (எபிரெயர் 12:1-3) அவர் ஊழியத்தை நேசித்தார். நீங்கள் ராஜ்ய பிரசங்கிப்பு வேலையில் பங்குகொள்வதற்கு சிலாக்கியம் பெற்றிருந்தால், அது ஓர் அர்த்தமற்ற வழக்கமுறையாக ஆகிவிடுவதற்கு அனுமதியாதீர்கள். இயேசு செய்தது போல மற்றவர்களுக்கு கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி போதிப்பதில் திருப்தியைக் காண நாடுங்கள். ஒரு போதகராக நீங்கள் முன்னேறுவதற்கு சபை அளிக்கும் போதனையைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுடைய ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு யெகோவா உங்களுக்கு பலனை அளிக்கமுடியும் என்பதைக் குறித்து நிச்சயமாயிருங்கள்.—1 கொரிந்தியர் 9:19-23.
21இயேசுவின் முன்மாதிரியை உண்மையுடன் பின்பற்ற முயற்சிசெய்யும் ஆகாய் 2:7, NW) இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறையின்மீது சீக்கிரத்தில் வரவிருக்கும் அவருடைய நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்படும்போது தப்பிப்பிழைப்பதற்காக குறியிடப்பட்டவர்களாக இப்படிப்பட்டவர்களைக் கடவுள் கருதுகிறார் என்பதாக பைபிள் தீர்க்கதரிசனங்கள் காண்பிக்கின்றன. (எசேக்கியேல் 9:1-6; மல்கியா 3:16, 18) நீங்கள் ‘நித்திய ஜீவனுக்கு ஏற்ற சரியான மனச்சாய்வு உடையவர்களாயிருக்கிறீர்களா?’ (அப்போஸ்தலர் 13:48, NW) கடவுளைச் சேவிப்பவர்களில் ஒருவராக குறியிடப்படுவது உங்கள் ஊக்கமான ஆசையாக இருக்கிறதா? ஒப்புக்கொடுத்தலும் முழுக்காட்டுதலும் அந்தக் குறியின் பாகமாக இருக்கின்றன, தப்பிப்பிழைப்பதற்கு அவை இன்றியமையாதவையாகும்.
ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட ஒரு நபர் கடவுளுக்கு விசேஷமானவராக இருக்கிறார். கோடிக்கணக்கான எல்லா மனித இருதயங்களையும் யெகோவா ஆராய்ந்து, இப்படிப்பட்ட தனிநபர்கள் எவ்வளவு அருமையாக இருக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறார். அவர்களை பொக்கிஷங்களாக ‘விரும்பத்தக்க காரியங்களாக,’ கருதுகிறார். (22உலகம் முழுவதிலும் ஏற்பட்ட அந்த ஜலப்பிரயத்துக்குப் பின், நோவாவும் அவருடைய குடும்பத்தினரும் பேழையிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட ஒரு பூமிக்குள் பிரவேசித்தனர். அதேவிதமாக இன்று, தேவனை அறியும் அறிவை தங்களுடைய வாழ்க்கையில் பொருத்திப் பிரயோகித்து யெகோவாவின் அங்கீகாரத்தைச் சம்பாதித்துக்கொள்ளும் ‘ஒரு திரள் கூட்டமான ஜனங்களுக்கு’ இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறையின் முடிவைத் தப்பிப்பிழைத்து நிரந்தரமாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு பூமியில் நித்திய ஜீவனைப் அனுபவித்துக்களிக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 7:9, 14) அந்த வாழ்க்கை எப்படிப்பட்டதாய் இருக்கும்?
உங்கள் அறிவை சோதித்துப்பாருங்கள்
தம்மைப் பற்றிய அறிவை நீங்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார்?
முழுக்காட்டுதலுக்கு வழிநடத்தும் சில படிகள் யாவை?
முழுக்காட்டுதல் ஏன் ஒரு முடிவாக இல்லாமல் ஒரு ஆரம்பமாகவே இருக்கிறது?
நம்முடைய ஒப்புக்கொடுத்தலுக்கும் முழுக்காட்டுதலுக்கும் ஏற்ப நாம் எவ்வாறு வாழலாம்?
[கேள்விகள்]
1, 2. தேவனை அறியும் அறிவைப் பெற்றிருப்பதைத் தவிர வேறு என்ன தேவைப்படுகிறது?
3. நமக்கான கடவுளுடைய சித்தம் என்ன?
4. இயேசு எவ்விதமாக யெகோவாவைப் பற்றி அதிகத்தை அறிந்திருக்கிறார், இந்த அறிவை அவர் எவ்விதமாக பயன்படுத்தியிருக்கிறார்?
5. இயேசு ஏன் முழுக்காட்டப்பட்டார், தம்முடைய முழுக்காட்டுதலின் பொருளுக்கேற்ப அவர் எவ்விதமாக வாழ்ந்தார்?
6. இயேசு எவ்விதமாக தம்மைத்தாமே சொந்தம் கைவிட்டார்?
7. ஒருவர் முழுக்காட்டுதலுக்குத் தகுதிபெற எடுக்கவேண்டிய சில படிகள் யாவை?
8. ராஜ்ய பிரசங்கிப்பு வேலையில் பங்குகொள்ள நீங்கள் விரும்பும்போது, என்ன நடவடிக்கையை எடுக்க வேண்டும்?
9. ஒரு நபர் எவ்விதமாக கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தலைச் செய்கிறார், ஒப்புக்கொடுத்தல் அந்த நபரின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது?
10. யெகோவாவுக்கு உங்களையே ஒப்புக்கொடுத்தப்பின்பு நீங்கள் ஏன் முழுக்காட்டப்பட வேண்டும்?
11. முழுக்காட்டப்படுவதன் பொருள் என்ன?
12. (அ) ‘பிதாவின் நாமத்திலே’ (ஆ) ‘குமாரனின் நாமத்திலே’ (இ) ‘பரிசுத்த ஆவியின் நாமத்திலே’ முழுக்காட்டப்படுவது என்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
13, 14. நாம் யெகோவா தேவனைச் சேவிக்க தெரிந்துகொள்வதற்கு ஏன் பயப்படக்கூடாது?
15. முழுக்காட்டுதலுக்குப் பொதுவான தடங்கல்கள் சில யாவை?
16. யெகோவாவைச் சேவிப்பதிலிருந்து நீங்கள் எவ்வாறு நன்மையடைவீர்கள்?
17. முழுக்காட்டுதலை ஒரு முடிவாக இல்லாமல் ஏன் ஆரம்பமாகவே கருதவேண்டும்?
18. முழுக்காட்டுதலுக்குப் பிறகு நீங்கள் பின்தொடரவேண்டிய ஒருசில இலக்குகள் யாவை?
19. பரிசுத்த ஆவி என்ன பண்புகளை வெளிப்படுத்த உங்களுக்கு உதவக்கூடும்?
20. என்ன வழிகளில் நீங்கள் ஊழியத்தில் இயேசுவைப் பின்பற்றலாம்?
21. (அ) யெகோவா உண்மையுள்ள முழுக்காட்டப்பட்ட தனிநபர்களை உயர்வாக மதிக்கிறார் என்பது நமக்கு எப்படித் தெரியும்? (ஆ) இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறையின்மீது கடவுளுடைய நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்படும்போது நாம் தப்பிப்பிழைப்பதற்கு முழுக்காட்டுதல் முக்கியம் என்பதை எது காட்டுகிறது?
22. ‘திரள் கூட்டமான ஜனங்கள்’ என்ன எதிர்பார்ப்பின் நிறைவேற்றங்களை எதிர்நோக்கியிருக்கின்றனர்?
[பக்கம் 172-ன் படம்]
ஜெபத்தில் கடவுளுக்கு நீங்கள் ஒப்புக்கொடுத்தலைச் செய்துவிட்டீர்களா?
[பக்கம் 174-ன் படங்கள்]
முழுக்காட்டப்படுவதிலிருந்து உங்களை தடைசெய்வது என்ன?