Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சீஷர்களை உருவாக்குவது

பாடம் 11

எளிமை

எளிமை

நியமம்: ‘எளிமையாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் பேசுங்கள்.’—1 கொ. 14:9.

இயேசு என்ன செய்தார்?

1. வீடியோவைப் பாருங்கள், அல்லது மத்தேயு 6:25-27-ஐ வாசியுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளை யோசித்துப் பாருங்கள்:

  1.   அ. யெகோவா நம்மை அன்பாகக் கவனித்துக்கொள்கிறார் என்பதை இயேசு என்ன உதாரணம் சொல்லிப் புரியவைத்தார்?

  2.  ஆ. பறவைகளைப் பற்றி இயேசுவுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருந்தாலும், எந்த எளிமையான விஷயத்தைப் பற்றிப் பேசினார்? இப்படிக் கற்றுக்கொடுப்பது ஒரு நல்ல முறை என்று ஏன் சொல்லலாம்?

இயேசுவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

2. எளிமையாக சொல்லிக்கொடுத்தால், நாம் சொல்லும் விஷயம் மக்களுடைய மனதைத் தொடும், அவர்களுடைய மனதைவிட்டு நீங்காமலும் இருக்கும்.

இயேசு மாதிரி நடந்துகொள்ளுங்கள்

3. நிறையப் பேசாதீர்கள். ஒரு விஷயத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த எல்லாவற்றையும் சொல்லாதீர்கள். படிப்பு நடத்தும் புத்தகத்தில் இருக்கும் குறிப்புகளுக்கு மட்டும் கவனம் செலுத்துங்கள். ஒரு கேள்வியைக் கேட்ட பிறகு, மாணவர் பதில் சொல்லும்வரை பொறுமையாகக் காத்திருங்கள். ஒருவேளை அவருக்குப் பதில் தெரியவில்லையா? பைபிள் போதனைக்கு முரணான ஒரு கருத்தைச் சொல்கிறாரா? அப்படியென்றால், கேள்விகளைக் கேட்டு, அவராகவே சரியான முடிவுக்கு வர உதவுங்கள். முக்கியக் குறிப்பை அவர் புரிந்துகொண்டதும் அடுத்த குறிப்புக்குப் போங்கள்.

4. படிக்கப்போகும் விஷயத்தை ஏற்கெனவே படித்ததோடு சம்பந்தப்படுத்திப் பார்க்க உதவுங்கள். உதாரணத்துக்கு, உயிர்த்தெழுதலைப் பற்றிய பாடத்தை ஆரம்பிக்கப்போகிறீர்கள் என்றால், இறந்தவர்களுடைய நிலைமையைப் பற்றி அவர் ஏற்கெனவே படித்த விஷயங்களைச் சுருக்கமாகக் கலந்துபேசலாம்.

5. உதாரணங்களைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள். ஒரு உதாரணத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு இப்படி யோசித்துப் பாருங்கள்:

  1.   அ. ‘இந்த உதாரணம் எளிமையாக இருக்கிறதா?’

  2.  ஆ. ‘இதை அவர் சுலபமாகப் புரிந்துகொள்வாரா?’

  3.  இ. ‘உதாரணத்தை மட்டுமல்ல, முக்கிய குறிப்பையும் ஞாபகம் வைத்துக்கொள்ள இந்த உதாரணம் உதவியாக இருக்குமா?’

இதையும் பாருங்கள்