அட்டைப்படக் கட்டுரை | பைபிளை நன்றாகப் புரிந்துகொள்வது எப்படி
சந்தோஷமாக வாழ பைபிள் நமக்கு எப்படி உதவும்?
பைபிள் ஒரு சாதாரண புத்தகம் கிடையாது. அதில் நம்முடைய படைப்பாளர் கொடுத்த ஆலோசனைகள் இருக்கின்றன. (2 தீமோத்தேயு 3:16) நம்முடைய வாழ்க்கையையே மாற்றும் சக்தி பைபிளுக்கு இருக்கிறது. ஏனென்றால், “கடவுளுடைய வார்த்தைக்கு உயிர் இருக்கிறது, வல்லமை இருக்கிறது.” (எபிரெயர் 4:12) சந்தோஷமாக வாழ பைபிள் நமக்கு இரண்டு முக்கியமான விதங்களில் உதவுகிறது: (1) வாழ்க்கைக்கு தேவையான ஆலோசனைகளைத் தருகிறது. (2) கடவுளைப் பற்றியும் அவருடைய வாக்குறுதிகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள உதவுகிறது.—1 தீமோத்தேயு 4:8; யாக்கோபு 4:8.
இப்போதே சந்தோஷமாக வாழ முடியும். வாழ்க்கைக்கு தேவையான ஆலோசனைகள் பைபிளில் இருக்கின்றன. பைபிளை படித்தால்...
- எல்லாரோடும் சமாதானமாக இருக்க முடியும். —
-
உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். —சங்கீதம் 37:8; நீதிமொழிகள் 17:22.
-
ஒழுக்கமாக வாழ முடியும்.—1 கொரிந்தியர் 6:9, 10.
-
பணக்கஷ்டத்தைச் சமாளிக்க முடியும். —நீதிமொழிகள் 10:4; 28:19; எபேசியர் 4:28. *
ஆசியாவில் இருக்கும் விசென்ட்-ஆனளூ என்ற இளம் தம்பதிக்கு பைபிளில் இருக்கும் ஆலோசனைகள் பிரயோஜனமாக இருந்தது. புதிதாக கல்யாணமான தம்பதிகளுக்கு பொதுவாக ஒருவரைவொருவர் அனுசரித்து போவதும், மனம்விட்டு பேசுவதும் கஷ்டமாக இருக்கும். அதே பிரச்சினை இவர்களுக்கும் இருந்தது. ஆனால், இவர்கள் பைபிளைப் படித்து அதன்படி வாழ்ந்தார்கள். பின்பு என்ன நடந்தது என்று விசென்ட் சொல்கிறார்: “பைபிள வாசிச்சதுனால எங்களுக்குள்ள வர பிரச்சினைய எப்படி அன்பா சரிசெய்றதுனு கத்துக்கிட்டேன். பைபிள் சொல்ற மாதிரி வாழ்றதுனால நாங்க சந்தோஷமா இருக்கோம்.” அவருடைய மனைவி ஆனளூ சொல்கிறார், “கடவுள் பக்தியுள்ள நபர்கள பத்தி பைபிள்ல படிச்சது எங்களுக்கு உதவியா இருந்துச்சு. எங்க திருமண வாழ்க்கைல நாங்க இப்போ சந்தோஷமாவும் திருப்தியாவும் இருக்கோம். எங்களோட லட்சியங்கள நினைச்சும் சந்தோஷப்படுறோம்.”
கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும். பைபிளை படித்ததால் தன்னுடைய திருமண வாழ்க்கையில் மட்டுமல்ல, இன்னும் நிறைய விதங்களிலும் விசென்ட் நன்மை அடைந்திருக்கிறார். அவர் சொல்கிறார்: “பைபிள படிக்கிறதுனால, என் வாழ்க்கைல எப்பவும்விட இப்போ யெகோவாகிட்ட * நெருங்கிவர முடிஞ்சிருக்கு.” விசென்ட் சொன்ன விஷயத்திலிருந்து ஒரு முக்கியமான உண்மையைப் புரிந்துகொள்ள முடிகிறது. பைபிளை படித்தால் கடவுளைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு அவரிடம் நெருங்கி வர முடியும். பைபிள், நமக்கு அறிவுரைகளைத் தருவதோடு கடவுளுடைய நண்பராவதற்கும் உதவி செய்கிறது. கடவுள் தரப்போகிற எதிர்காலத்தில் நாம் அனுபவிக்கப்போகும் “உண்மையான வாழ்வை” பற்றியும் சொல்கிறது. (1 தீமோத்தேயு 6:19) இந்த அருமையான விஷயங்கள் வேறு எந்தப் புத்தகத்திலும் இல்லை.
நீங்களும் பைபிளை தவறாமல் படியுங்கள். அப்படிச் செய்தால் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள்; கடவுளைப் பற்றியும் தெரிந்துகொள்வீர்கள். பைபிளை படிக்கப் படிக்க உங்களுக்கு நிறைய கேள்விகள் வரலாம். உங்கள் மனதில் கேள்விகள் வரும்போது 2,000 வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்த எத்தியோப்பிய அதிகாரியின் உதாரணத்தை யோசித்துப் பாருங்கள். பைபிளை வாசித்தபோது அவருக்கும் நிறைய கேள்விகள் வந்தது. படிக்கும் விஷயங்களைப் புரிந்துகொண்டாரா என்று இயேசுவின் சீஷராக இருந்த பிலிப்பு அவரிடம் கேட்டபோது, “ஒருவர் கற்றுக்கொடுக்காவிட்டால் எனக்கு எப்படிப் புரியும்?” என்று அவர் சொன்னார். * பிறகு பிலிப்பு, அவருக்கு பைபிளில் இருக்கும் உண்மைகளைச் சொல்லிக்கொடுத்தார். பிலிப்பு கடவுளுடைய வார்த்தையைப் பற்றி நன்றாக தெரிந்த ஒரு நபராக இருந்தார். (அப்போஸ்தலர் 8:30, 31, 34) நீங்களும் பைபிளை பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விரும்பினால் www.isa4310.com வெப்சைட்டில் இருக்கும் “பைபிள் படிப்பு வேண்டும்” என்ற படிவத்தை நிரப்பி அனுப்பலாம். அல்லது இந்தப் பத்திரிகையில் கொடுக்கப்பட்டிருக்கும் விலாசத்துக்கு எழுதி அனுப்பலாம். உங்கள் இடத்துக்கு பக்கத்தில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளையும் நீங்கள் தொடர்புகொள்ளலாம். அவர்களுடைய கூட்டங்களுக்கும் போகலாம். இன்றே பைபிளை படிக்க ஆரம்பியுங்கள். வாழ்க்கையில் சந்தோஷத்தை அனுபவியுங்கள்.
பைபிள் சொல்கிற எல்லாவற்றையும் நம்ப முடியுமா என்று நீங்கள் யோசித்தால், பைபிளை நம்பலாமா? என்ற வீடியோவைப் பாருங்கள். இதைப் பார்க்க இங்கிருக்கும் QR code-ஐ ஸ்கேன் செய்யுங்கள், அல்லது jw.org-ல் வீடியோ என்ற தலைப்பில் பாருங்கள்
[அடிக்குறிப்புகள்]
^ பாரா. 8 பைபிளில் இன்னும் நிறைய ஆலோசனைகள் இருக்கின்றன. அதைத் தெரிந்துகொள்ள jw.org-ல் பைபிள் போதனைகள் >பைபிள் கேள்விகளுக்கான பதில்கள் என்ற தலைப்பில் பாருங்கள்.
^ பாரா. 10 யெகோவா என்பது பைபிளில் கடவுளுடைய பெயர்.
^ பாரா. 11 இதே பத்திரிகையில் இருக்கும் “பைபிளை சரியாக புரிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.