Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்க கேள்விக்கு பதில்...

கடவுளுடைய அரசாங்கம் எப்போ ஆட்சி செய்ய ஆரம்பிச்சிது? (பகுதி 1)

கடவுளுடைய அரசாங்கம் எப்போ ஆட்சி செய்ய ஆரம்பிச்சிது? (பகுதி 1)

ஜான் என்பவர் கேட்கிற கேள்விக்கு, வினோத் என்ற யெகோவாவின் சாட்சி, பைபிள்ல இருந்து எப்படி பதில் சொல்றார்னு பாருங்க.

ஆராய்ச்சி செஞ்சு படிங்க

வினோத்: போன வாரம் வந்தப்போ கடவுளுடைய அரசாங்கத்த (பரலோக ராஜ்யத்த) பத்தி ஒரு கேள்வி கேட்டீங்க இல்லையா? * (அடிக்குறிப்பை பாருங்க.) ‘கடவுளுடைய அரசாங்கம் 1914-லதான் ஆட்சி செய்ய ஆரம்பிச்சிதுனு எப்படி சொல்றீங்க’னு நீங்க கேட்டீங்க.

ஜான்: ஆமா, நீங்க கொடுத்த புத்தகத்த படிச்சு பார்த்தேன். 1914-ல கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்ய ஆரம்பிச்சுதுனு அதில போட்டிருந்தாங்க. நீங்க எதுவா இருந்தாலும் பைபிள்ல இருந்துதான் சொல்வீங்க. அதான், உங்ககிட்ட இதை பத்தி கேட்கலாம்னு நினைச்சேன்.

வினோத்: சரி, பைபிள்ல இருந்தே இதுக்கு பதில பார்க்கலாம்.

ஜான்: நான் முழு பைபிளையும் படிச்சிருக்கேன். ஆனா, எந்த இடத்திலயும் 1914-ங்கிற வருஷத்த பார்த்ததே இல்ல. இன்டர்நெட்ல இருக்கிற பைபிள்ல, “1914” இருக்கானு தேடினேன். அதிலயும் ஒரு இடத்துலகூட இல்ல.

வினோத்: முழு பைபிளையும் படிச்சிருக்கீங்களா, வெரி குட்!

ஜான்: ஆமா, எனக்கு பைபிள் படிக்கிறதுனா ரொம்ப பிடிக்கும்.

வினோத்: உங்க கேள்விக்கு பைபிள்ல இருந்தே பதில் தெரிஞ்சிக்கனும்னு நினைக்கிறது ரொம்ப நல்லது. இந்த மாதிரி ஆராய்ச்சி செஞ்சு படிக்கனும்னு பைபிளே சொல்லுது. (நீதிமொழிகள் 2:3-5)

ஜான்: நான் படிக்கிற விஷயத்த நல்லா புரிஞ்சிக்கனும்னு நினைப்பேன். அதனாலதான், நீங்க கொடுத்த புத்தகத்தையும் நல்லா படிச்சு பார்த்தேன். அந்த புத்தகத்தில 1914-ஐ பத்தி போட்டிருந்தாங்க. அதில, ஏதோ ஒரு ராஜாவோட கனவ பத்தி இருந்தது. அந்த கனவுல ஒரு பெரிய மரத்த பார்ப்பார், அது வளர்ந்துகிட்டே போகும், அப்புறம் அதை வெட்டிடுவாங்கனு இருந்தது.

வினோத்: நீங்க சொல்றது தானியேல் 4-வது அதிகாரத்தில இருக்கு. அந்த ராஜாவோட பேர் நேபுகாத்நேச்சார். அவர் பாபிலோன் நாட்டு ராஜா.

ஜான்: தானியேல் 4-வது அதிகாரத்த நான் நிறைய தடவ படிச்சிருக்கேன். ஆனா, அதில எங்கயுமே 1914-ஐ பத்தி சொல்லலியே! அதுக்கும் கடவுளுடைய அரசாங்கத்துக்கும் என்ன சம்பந்தம்னு எனக்கு புரியல.

வினோத்: இதை எழுதின தானியேலுக்குகூட அந்த வசனத்தோட அர்த்தம் புரியல.

ஜான்: அப்படியா?

வினோத்: ஆமா, தானியேல் 12:8-ஐ பாருங்க: “நான் அதைக் கேட்டும், அதின் பொருளை அறியவில்லை”னு தானியேலே சொல்றார்.

ஜான்: ஓ... அவருக்கே புரியலயா!

வினோத்: ஏன்னா, அந்த விஷயங்கள தானியேலோட காலத்தில புரிஞ்சிக்க முடியாதுனு கடவுள் சொன்னார். ஆனா, இப்போ அதை நாம புரிஞ்சிக்க முடியும்.

ஜான்: இப்போ எப்படி புரிஞ்சிக்க முடியும்?

வினோத்: இதுக்கு தானியேல் 12:9-ல பதில் இருக்கு. அதை இப்போ நான் படிக்கிறேன்: “இந்த வார்த்தைகள் முடிவு காலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும்.” அப்படினா, ‘முடிவு காலத்தில’ வாழ்றவங்கதான் இதையெல்லாம் புரிஞ்சிக்க முடியும். நாம ‘முடிவு காலத்திலதான்’ வாழ்றோம். முடிவு காலத்த பத்தி உங்களுக்கு நான் அப்புறம் சொல்றேன். * (அடிக்குறிப்பை பாருங்க.)

ஜான்: சரி.

வினோத்: இப்போ நாம அந்த கனவ பத்தி பார்க்கலாம்.

நேபுகாத்நேச்சாரின் கனவு

வினோத்: முதல்ல, அந்த ராஜா என்ன கனவு கண்டார்னு சொல்லட்டுமா?

ஜான்: ம், சொல்லுங்க.

வினோத்: அந்தக் கனவுல ராஜா ஒரு மரத்த பார்த்தார். அது வானம் வரைக்கும் வளர்ந்தது. அப்போ, ஒரு தேவதூதர் அந்த மரத்த வெட்ட சொன்னார். ஆனா, வேரோட வெட்டாம, அடிமரத்த அப்படியே விட்டுட சொன்னார். ‘ஏழு காலங்களுக்கு’ அப்புறம் அந்த மரம் திரும்பவும் வளரும். (தானியேல் 4:13-17) அந்தக் கனவுல வந்த மாதிரியே நேபுகாத்நேச்சார் வாழ்க்கையிலயும் நடந்தது. அந்த மரம் பெரிசா இருந்த மாதிரி, நேபுகாத்நேச்சாரும் அதிகாரமுள்ள ஒரு பெரிய ராஜாவா இருந்தார். ஆனா, அவரால தொடர்ந்து ஆட்சி செய்ய முடியல. ‘ஏழு காலங்கள்,’ அதாவது ஏழு வருஷம், அவரோட ஆட்சிக்கு தடை வந்தது. ஏன்னு தெரியுமா?

ஜான்: தெரியலயே.

வினோத்: ஏழு வருஷம் அவர் பைத்தியமா இருந்தார். அதனாலதான் அவரால ஆட்சி செய்ய முடியல. ஏழு வருஷத்துக்கு அப்புறம் அவர் மறுபடியும் ஆட்சி செய்ய ஆரம்பிச்சார். (தானியேல் 4:20-36)

ஜான்: இதுவரைக்கும் எனக்கு புரியிது. ஆனா, இதில 1914-ஐ பத்தியோ கடவுளுடைய அரசாங்கத்த பத்தியோ எதுவுமே சொல்லலியே!

வினோத்: இந்தக் கனவுக்கு இன்னொரு அர்த்தமும் இருக்கு. அதை புரிஞ்சிக்கிட்டாதான் கடவுளுடைய அரசாங்கத்த பத்தி புரிஞ்சிக்க முடியும். அந்த கனவுல வந்த மாதிரி, கடவுளுடைய ஆட்சிக்கும் கொஞ்ச காலத்துக்கு தடை வரும்.

ஜான்: கடவுளுடைய அரசாங்கத்துக்கும் இந்த கனவுக்கும் என்ன சம்பந்தம்?

வினோத்: அதை புரிஞ்சிக்க தானியேல் 4:17-ஐ படிச்சு பார்க்கலாம். “உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து, மனுஷரில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார்” என்பதை எல்லாரும் புரிஞ்சிக்கனும்னு போட்டிருக்கு. “மனுஷருடைய ராஜ்யத்தில்” யார் ஆட்சி செய்வார்னு இந்த வசனம் சொல்லுது?

ஜான்: “உன்னதமானவர்” ஆட்சி செய்வார்னு சொல்லுது.

வினோத்: சரியா சொன்னீங்க. “உன்னதமானவர்”னா யாருனு தெரியுமா?

ஜான்: கடவுளா?

வினோத்: ஆமா, கடவுள்தான். அப்படினா, அந்தக் கனவு நேபுகாத்நேச்சாரோட ஆட்சிய பத்தி மட்டும் சொல்லல, கடவுளுடைய அரசாங்கத்த பத்தியும் சொல்லுது. அதுமட்டும் இல்ல, தானியேல் புத்தகத்தில நிறைய இடங்கள்ல கடவுளுடைய அரசாங்கத்த பத்தி சொல்லியிருக்கு.

ஜான்: அப்படியா?

தானியேல் புத்தகத்தில என்ன சொல்லியிருக்கு?

வினோத்: ஆமா, அதுல இயேசுதான் ராஜாவா இருப்பார்னும் சொல்லியிருக்கு. நாம இப்போ தானியேல் புத்தகத்தில இருந்து சில வசனங்கள பார்க்கலாம். முதல்ல தானியேல் 2:44-ஐ படிக்கிறீங்களா?

ஜான்: ம்... “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த [மனித] ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”

வினோத்: கடவுளுடைய ராஜ்யத்த பத்தி இந்த வசனத்தில என்ன சொல்லியிருக்கு?

ஜான்: தெரியலயே...

வினோத்: அந்த ராஜ்யம் “என்றென்றைக்கும் நிற்கும்”னு போட்டிருக்கு பாருங்க. அப்படினா அந்த ராஜ்யம் அழியாம, எப்பவும் இருக்கும்னு அர்த்தம். கொஞ்சம் யோசிச்சு பாருங்க, எந்த மனுஷனாவது “என்றென்றைக்கும்” ஆட்சி செய்ய முடியுமா?

ஜான்: முடியாது.

வினோத்: ம்... கடவுளால மட்டும்தான் “என்றென்றைக்கும்” ஆட்சி செய்ய முடியும். தானியேல் புத்தகத்தில இன்னொரு வசனத்த பாருங்களேன். தானியேல் 7:13, 14: “சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரீகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.” இந்த வசனம் தானியேல் 2:44 மாதிரியே இருக்கு பார்த்தீங்களா!

ஜான்: ஆமா, இதிலயும் ராஜ்யத்த பத்தி சொல்லியிருக்கு.

வினோத்: இந்த வசனத்துல, அந்த ராஜா எல்லா ஜனங்களையும் எல்லா மொழி பேசுறவங்களையும் ஆட்சி செய்வார்னு போட்டிருக்கு. அப்படினா, அவர் உலகம் முழுசும் ஆட்சி செய்வார்.

ஜான்: ம்... இந்த வசனம் அப்படித்தான் சொல்லுது.

வினோத்: அந்த அரசாங்கம், எப்பவும் ‘அழியாம இருக்கும்’னு இந்த வசனம் சொல்லுது. உங்களுக்கு ஞாபகம் இருக்கா, இதே விஷயத்தைதான தானியேல் 2:44-லயும் படிச்சோம்?

ஜான்: ஆமா, இதேதான் படிச்சோம்.

வினோத்: தானியேல் 4-வது அதிகாரத்தில இருக்கிற கனவு, கடவுளுடைய அரசாங்கத்த பத்தியும் சொல்லுதுனு பார்த்தோம். அந்த அரசாங்கத்தில இயேசுதான் ராஜாவா இருப்பார்னு பார்த்தோம். இதுவரைக்கும் உங்களுக்கு புரியிதா?

ஜான்: ம்... புரியிது. ஆனா, 1914-ஐ பத்தி எதுவுமே சொல்லலியே!

“ஏழு காலங்கள்” முடிஞ்ச பிறகு...

வினோத்: இதை தெரிஞ்சிக்க, மறுபடியும் நேபுகாத்நேச்சாரோட கனவ பார்க்கலாம். அந்தக் கனவுல பார்த்த மாதிரி அந்த ராஜாவால கொஞ்ச நாள் ஆட்சி செய்ய முடியல. ஏன்னா, ஏழு வருஷம் அவர் பைத்தியமா இருந்தார். ஏழு வருஷத்துக்கு அப்புறம் அவர் மறுபடியும் ஆட்சி செய்ய ஆரம்பிச்சார். நேபுகாத்நேச்சாரோட ஆட்சிக்கு கொஞ்ச நாள் தடை வந்த மாதிரி, கடவுளோட ஆட்சிக்கும் கொஞ்ச நாள் தடை வந்துச்சு.

ஜான்: எப்படி சொல்றீங்க?

வினோத்: இஸ்ரவேல் மக்கள ஆட்சி செஞ்ச ராஜாக்கள் எருசலேம்ல இருந்து ஆட்சி செஞ்சாங்க (எருசலேம் என்பது இஸ்ரவேலின் தலைநகரம்). அந்த ராஜாக்கள் யெகோவாவுடைய “சிங்காசனத்தில்” இருந்து ஆட்சி செஞ்சதா பைபிள் சொல்லுது. (1 நாளாகமம் 29:23) ஏன்னா, அவங்க கடவுளோட மக்கள ஆட்சி செஞ்சாங்க. அந்த அதிகாரத்த கடவுள்தான் அவங்களுக்கு கொடுத்தார். ஆனா, போகப்போக அந்த ராஜாக்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாம போயிட்டாங்க. மக்களும் கெட்டவங்களா மாறிட்டாங்க. அதனால, கி.மு. 607-ல பாபிலோன் நாட்டுல இருக்கிறவங்க இஸ்ரவேலர்கள அடிமைகளா பிடிச்சிட்டு போக கடவுள் விட்டுட்டார். அந்த சமயத்தில இருந்து எந்த ராஜாவும் இஸ்ரவேல்ல ஆட்சி செய்யல. இது கடவுளுடைய ஆட்சிக்கே தடை வந்த மாதிரி இருந்தது. இதுவரைக்கும் நான் சொன்னதெல்லாம் உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.

ஜான்: ம்... புரிஞ்சிது.

வினோத்: கி.மு. 607-லதான் “ஏழு காலங்கள்” ஆரம்பிச்சிது. அந்த “ஏழு காலங்கள்” முடியும்போது கடவுளுடைய அரசாங்கம் மறுபடியும் ஆட்சி செய்யும். அந்த அரசாங்கத்தோட ராஜா, பரலோகத்திலிருந்து ஆட்சி செய்வார். கடவுளுடைய அரசாங்கத்த பத்தி தானியேல் புத்தகத்தில சொல்லியிருக்கிற மத்த விஷயங்களும் அந்த சமயத்திலதான் நடக்கும். அந்த “ஏழு காலங்கள்” எப்போ முடியும்னு தெரியுமா?

ஜான்: 1914-லதான் அந்த ஏழு காலங்கள் முடிஞ்சதுனு சொல்றீங்களா?

வினோத்: ஆமா.

ஜான்: எப்படி சொல்றீங்க?

வினோத்: இயேசு பூமிக்கு வரதுக்கு ரொம்ப வருஷம் முன்னாடியே ஏழு காலங்கள் ஆரம்பிச்சிது. அவர் பூமியில இருக்கும்போது ஏழு காலங்கள் இன்னும் முடியலனு சொன்னார். * (அடிக்குறிப்பை பாருங்க.) அவர் பரலோகத்துக்கு போனதுக்கு அப்புறம்கூட அந்த ஏழு காலங்கள் முடியலனு பைபிள் சொல்லுது. அப்படினா ஏழு காலங்கள், வெறும் ஏழு வருஷம் இல்லனு தெரியிது. தானியேல் 12:9-ல படிச்சது உங்களுக்கு ஞாபகம் இருக்கா! ‘முடிவு காலத்தில’ வாழ்றவங்கதான் தானியேல் புத்தகத்தில இருக்கிற விஷயங்கள புரிஞ்சிக்க முடியும்னு பார்த்தோம். அந்த வசனத்தில சொன்னது, 1850-வது வருஷத்துக்கு அப்புறம் நடக்க ஆரம்பிச்சிது. அப்போ சிலர் பைபிள ஆராய்ச்சு செஞ்சு, 1914-லதான் அந்த ஏழு காலங்கள் முடியும்னு புரிஞ்சிக்கிட்டாங்க. 1914-ல கடவுளுடைய அரசாங்கம் மறுபடியும் ஆட்சி செய்ய ஆரம்பிச்சிது. அதுக்கு ஆதாரமா நிறைய விஷயங்கள் பூமியில நடந்தது. இது எல்லாத்தையும் உடனே புரிஞ்சிக்கிறது கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும்.

ஜான்: ஆமாங்க, நான் மறுபடியும் இந்த வசனங்கள எல்லாம் படிச்சு பார்க்கிறேன்.

வினோத்: நான்கூட இதையெல்லாம் புரிஞ்சிக்க ரொம்ப நாள் ஆச்சு. ஆனா, எல்லா விஷயத்தையும் பைபிள்ல இருந்தே தெரிஞ்சிக்கும்போது நமக்கு சந்தோஷமா இருக்கும்.

ஜான்: யெகோவாவின் சாட்சிகள் எது சொன்னாலும் பைபிள்ல இருந்து சொல்றது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

வினோத்: பைபிள்ல இருந்தே எல்லாத்துக்கும் பதில் தெரிஞ்சிக்க நினைக்கிறீங்க. அதுக்காக உங்கள பாராட்டுறேன். ஒருவேளை, இன்னும் உங்களுக்கு சில சந்தேகம் இருக்கலாம். ஏழு காலங்கள் எப்படி 1914-ல முடிஞ்சுதுனு நீங்க யோசிக்கலாம். * (அடிக்குறிப்பை பாருங்க.)

ஜான்: ஆமா, நானே அதை கேட்கனும்னு நினைச்சேன்.

வினோத்: பைபிள்லயே அதுக்கு பதில் இருக்கு. அடுத்த தடவ அதை பத்தி சொல்றேனே!

ஜான்: ம்... சரி. ▪ (w14-E 10/01)

பைபிள்ல இருக்கிற விஷயத்த பத்தி நிறைய தெரிஞ்சிக்கனும்னு உங்களுக்கு ஆசையா? யெகோவாவின் சாட்சிகள் ஏன் சில விஷயங்கள செய்றாங்க, ஏன் சில விஷயங்கள செய்றதில்லனு யோசிக்கிறீங்களா? யெகோவாவின் சாட்சிகள்கிட்டயே அதை பத்தி கேளுங்க.

^ பாரா. 5 பைபிள பத்தி தெரிஞ்சிக்க விரும்புறவங்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் இலவசமா சொல்லித்தராங்க.

^ பாரா. 21 பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில 9-வது அதிகாரத்த பாருங்க. www.isa4310.com

வெப்சைட்டிலும் இந்தப் புத்தகம் கிடைக்கும். இது யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகம்.

^ பாரா. 63 “புறதேசத்தாருக்குக் குறிக்கப்பட்ட காலங்கள் நிறைவேறும்வரை எருசலேம் [இங்கு எருசலேம், கடவுளுடைய அரசாங்கத்தைக் குறிக்கிறது] புறதேசத்தாரால் மிதிக்கப்படும்”னு இயேசு சொன்னார். (லூக்கா 21:24) இதிலிருந்து என்ன தெரியிது? இயேசு பூமியில இருந்தப்போ ஏழு காலங்கள் முடியலனும், கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்ய ஆரம்பிக்கலனும் தெரிஞ்சிக்கிறோம். முடிவு காலத்த பத்தி சொல்லும்போதுதான் இயேசு இந்த வசனத்த சொன்னார். அதனால, முடிவு காலத்திலதான் கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்ய ஆரம்பிக்கும்னு புரிஞ்சிக்க முடியிது.

^ பாரா. 67 பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில 215-218 பக்கங்கள பாருங்க. www.isa4310.com வெப்சைட்டிலும் இந்தப் புத்தகம் கிடைக்கும்.