அட்டைப்பட கட்டுரை | சோதனைகள் இடியாய் தாக்கும்போது...
சோதனைகள் இடியாய் தாக்கும்போது...
சோதனைகள் யாருக்கு வரும், எப்படி வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. ‘எங்களுக்கு எந்த குறையும் இல்லை’ என்று சொல்பவர்களைக்கூட கஷ்டங்கள் இடியாய் தாக்குகின்றன.
பைபிள் இப்படிச் சொல்கிறது:
“வேகமாக ஓடுகிறவன் எப்போதும் பந்தயத்தில் வெற்றி பெறுவதில்லை, வலிமையுள்ளவன் எப்போதும் போரில் வெற்றி பெறுவதில்லை, ஞானமுள்ளவனுக்கு எப்போதும் உணவு கிடைப்பதில்லை, புத்திசாலி எப்போதும் பணக்காரன் ஆவதில்லை, திறமையுள்ளவன் எப்போதும் வெற்றி பெறுவதில்லை. ஏனென்றால், எதிர்பாராத நேரத்தில் அசம்பாவிதங்கள் எல்லோருக்கும் நேரிடுகிறது.” —பிரசங்கி 9:11, NW.
அப்படியென்றால், நமக்குக் கஷ்டங்கள் வருமா வராதா என்று யோசிப்பதைவிட, கஷ்டங்கள் வரும்போது அதை எப்படிச் சமாளிக்கப்போகிறோம் என்பதுதான் முக்கியம்! உதாரணத்திற்கு:
பேரழிவில் உங்கள் சொத்துசுகங்களை இழந்துவிட்டால்...
மோசமான வியாதி வந்தால்...
குடும்பத்தாரோ நண்பரோ இறந்துவிட்டால்... என்ன செய்வது?
கஷ்டத்தைச் சமாளிக்கவும் நல்ல எதிர்காலம் வரும் என்ற நம்பிக்கையோடு வாழவும் பைபிள் உங்களுக்கு உதவும். (ரோமர் 15:4) கஷ்டத்தைச் சமாளித்த மூன்று பேருடைய அனுபவத்தை இப்போது பார்க்கலாம். (g14-E 09)