Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான் ஏன் ஹாலோவீன் கொண்டாடுவதில்லை

நான் ஏன் ஹாலோவீன் கொண்டாடுவதில்லை

நான் ஏன் ஹாலோவீன் கொண்டாடுவதில்லை

ஹாலோவீன். சில நாடுகளில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இந்தப் பிரபலமான பண்டிகை, ஆவியுலகத்தோடு நெருங்கிய சம்பந்தமுடையது. கனடாவில் வாழும் 14 வயது மைக்கேலின் அக்கம்பக்கத்தார் கடந்த வருடம் ஹாலோவீனுக்காக படு மும்முரமாகத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவன் மனதிலோ வேறு விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. பள்ளிக்காக அவன் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தான்:

‘இது ஹாலோவீன் பண்டிகைக்கு முந்திய இரவு. நான் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தேன். பக்கத்து வீட்டுக்காரர்கள் தங்கள் தோட்டத்துப் புல்தரைகளில் கல்லறைகள் செய்தும் எலும்புக்கூடுகளை வைத்தும் அலங்கரித்திருக்கிறார்கள்; ஜன்னல் நிலைகளில் ஜாக்கோ லேன்டர்ன் விளக்குகள் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன. a பிள்ளைகளுடைய ஆடை அணிகலன்களை பெற்றோர்கள் சரிசெய்து கொண்டிருக்கிறார்கள்; பிள்ளைகளோ அடுத்தநாள் கிடைக்கப்போகும் மிட்டாய்களை நினைத்து கனவில் மிதந்து கொண்டிருக்கிறார்கள்.

‘என்னுடைய வீடோ வித்தியாசமாக இருந்தது. புல்தரை அலங்கரிக்கப்படவில்லை, ஜன்னல் நிலைகளில் ஜாக்கோ லேன்டர்ன் வைக்கப்படவில்லை. மற்றவர்கள் என்னிடம் நான் ஏன் ஹாலோவீன் கொண்டாடுவதில்லை எனக் கேட்கிறார்கள். அதன் ஆரம்பத்தை அறிந்திருப்பதால்தான் யெகோவாவின் சாட்சிகள் அதைக் கொண்டாடுவதில்லை. b

‘ஹாலோவீன் பண்டிகைக் காலத்தை நான் விரும்புகிறேன் என்று சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படலாம். “ஏன்?” என்றும் கேட்கலாம். ஏனென்றால் அது என்னை ஆழமாய் சிந்திக்க வைக்கிறது; சில காரியங்களை நான் செய்யாமலிருப்பதற்கான காரணத்தை யோசிக்கத் தூண்டுகிறது. ஒரு பண்டிகை எப்படி ஆரம்பமானது என்பதை அறிந்திருப்பது அவசியமா என்று ஒவ்வொருவரும் தங்களிடமே கேட்டுக்கொள்ள வேண்டும். பண்டிகைகளின் ஆரம்பத்தைக் அறிந்திருப்பது அவசியமென்றே நான் நினைக்கிறேன். உதாரணமாக, அக்கம்பக்கத்தார் நாசிக்களைப் போல உடையணிந்திருப்பதைக் கண்டால் பெரும்பாலான மக்கள் அதிர்ச்சியடைவார்கள். ஏன்? நாசி சீருடையின் ஆரம்பத்தையும், அதன் கொள்கைகளையுமே அது நினைவுபடுத்துகிறது. ஆகவேதான் மக்கள் அதை வெறுக்கிறார்கள். அதே போல் பேய்கள், பொல்லாத ஆவிகள், சூனியக்காரிகள் சம்பந்தப்பட்ட கொள்கைகளை நான் அருவருக்கிறேன். அது தொடர்பான எந்தக் காரியத்திலும் ஈடுபட நான் விரும்பவில்லை. நாம் செய்யும் தெரிவுகளை குறித்தும், அவற்றிற்கான காரணத்தைக் குறித்தும் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. பிறகு பைபிள் நியமங்கள் அடிப்படையில் தெரிவுகளைச் செய்ய வேண்டும், பிரபல கருத்துகளின் அடிப்படையில் அல்ல. அதனால்தான் வருடாவருடம் இந்தப் பண்டிகைக் காலத்தை நான் விரும்புகிறேன். வித்தியாசமானவனாக இருப்பதிலும் என்னுடைய நம்பிக்கையில் உறுதியாக இருப்பதிலும் நான் பெருமிதம் கொள்கிறேன்.’

[அடிக்குறிப்புகள்]

a குடைந்தெடுக்கப்பட்ட பூசணிக்காயில் மூக்கு, வாய், கண்கள் போல வெட்டி ஒரு முகம்போல செய்வார்கள். மெழுகுவர்த்தியையோ வேறு ஏதாவது விளக்கையோ அதற்குள் வைப்பார்கள். இதுதான் ‘ஜாக்கோ லேன்டர்ன்’ என்று அழைக்கப்படுகிறது.

b கூடுதல் தகவலுக்கு, ஆங்கிலத்தில் விழித்தெழு! அக்டோபர் 8, 2001, பக்கங்கள் 5-10-ஐப் பார்க்கவும்.