Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மகிழ்ச்சியான மணவாழ்வு சாத்தியமா?

மகிழ்ச்சியான மணவாழ்வு சாத்தியமா?

மகிழ்ச்சியான மணவாழ்வு சாத்தியமா?

மெக்சிகோ நாட்டிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்குக் கடந்த வருடம் ஓர் இளம் தாய் கடிதம் எழுதியிருந்தார்; அதில், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு வழிகாட்டுமாறு கேட்டிருந்தார். அதில் விழித்தெழு! பத்திரிகையை வாசித்து மகிழ்ந்ததாகச் சொல்லி இவ்வாறு எழுதியிருந்தார்:

“எனக்குக் கல்யாணமாகி மூன்று வருடங்கள் ஆகின்றன. சந்தோஷமாக குடும்பம் நடத்துவதற்கு உதவும் புத்திமதிகளையும் ஆலோசனைகளையும் பெற விரும்புகிறேன். எங்களுக்கு இரண்டு வயதில் அழகான பையன் இருக்கிறான். அவனை நல்ல விதத்தில் வளர்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.”

இந்தப் பெண் குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டிருந்தார், அதைப் பெறுவதற்காகக் கடிதம் எழுதியிருந்தார். இதேபோல் ஆயிரக்கணக்கானோர் கடிதம் எழுதியிருக்கிறார்கள். இவர்களில் அநேகர் இப்புத்தகத்தை வாசித்த பிறகு தங்களுக்கு அது எந்தளவு உதவியது என்பதைப் பற்றியும் எழுதியிருக்கிறார்கள். அறிவுரைகள் நிறைந்த அப்புத்தகத்தின் சில அதிகாரங்கள் இதோ: “சிசுப்பருவத்திலிருந்தே உங்கள் பிள்ளையை பயிற்றுவியுங்கள்,” “உங்கள் குடும்பத்தை தீங்கு விளைவிக்கும் செல்வாக்குகளிலிருந்து பாதுகாத்திடுங்கள்,” “உங்கள் குடும்பத்தில் சமாதானத்தைக் காத்துக்கொள்ளுங்கள்.”

இந்தப் புத்தகத்தைப் பற்றி கூடுதல் தகவல் பெற விரும்பினால், இங்கே உள்ள கூப்பனைப் பூர்த்தி செய்து 5-⁠ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பவும்.

◻ குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகத்தைப் பற்றி எந்த நிபந்தனையுமின்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.

◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். தயவுசெய்து என்னைத் தொடர்புகொள்ளவும்.