Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

(இந்த வினாடிவினாவுக்கான விடைகளை கொடுக்கப்பட்டுள்ள பைபிள் வசனங்களில் காணலாம்; எல்லா விடைகளும் பக்கம் 27-⁠ல் அச்சிடப்பட்டுள்ளன. கூடுதலான தகவல் பெற விரும்பினால், யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்த “வேதாகமத்தின்பேரில் உட்பார்வை” [ஆங்கிலம்] என்ற பிரசுரத்தை ஆராய்ந்து பாருங்கள்.)

1. பேதுருவின்படி, எந்த காரணத்துக்காக ஆவிக்குரிய இஸ்ரவேலரை “தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி”யாக கடவுள் ஆக்கினார்? (1 பேதுரு 2:9)

2. இயேசு நடப்பித்த முதல் அற்புதம் எது, அதை எங்கே செய்தார்? (யோவான் 2:1-11)

3. எதிலிருந்து ஆதாமின் துணையாகிய ஏவாளை கடவுள் உருவாக்கினார்? (ஆதியாகமம் 2:22)

4. இஸ்ரவேலில் முக்கியத்துவம் வாய்ந்த எந்த மனிதனுடைய மகன்கள் “ஒன்றுக்கும் உதவாத மனிதர்”களாக அறியப்பட்டிருந்தனர்? (1 சாமுவேல் 2:12, NW)

5. பூர்வ காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த எந்த அளவு, ஓமருக்கு இணையாகவும் பத்து குடத்திற்கு சமமாகவும் இருந்தது? (லூக்கா 16:7)

6. பரிசேயருக்கு வானத்தின் தோற்றத்தை நிதானிக்கத் தெரிந்த போதிலும், எதை நிதானிக்கத் தெரியவில்லை என்று இயேசு கூறினார்? (மத்தேயு 16:3)

7. பாதுகாப்போடு சுகமாய் குடியிருக்கும் கடவுளின் ஜனங்களை யார் தாக்குவதாக எசேக்கியேல் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டுள்ளது? (எசேக்கியேல் 38:14-16; 39:11)

8. மதத் தலைவர்கள் “தங்கள் உதடுகளினால்” செலுத்திய வணக்கம் வீண் என்று இயேசு ஏன் கூறினார்? (மாற்கு 7:6, 7)

9. கானானைச் சபித்த விஷயத்தில் நோவாவின் எந்த குமாரன் உட்பட்டிருந்தார்? (ஆதியாகமம் 9:22-25)

10. எந்த கோத்திரத்தின் நிலம் இஸ்ரவேல் தேசத்தின் வட கோடியைக் குறிக்கும் பெயராயிற்று? (நியாயாதிபதிகள் 20:1)

11. தறியில் நீளவாக்கில் செல்லும் நெசவு நூலிழை எப்படி அழைக்கப்படுகிறது? (ஏசாயா 38:12)

12. கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இஸ்ரவேலைத் தொகையிட்ட பின்பு, தாவீதுக்கு கடவுள் முன்வைத்த மூன்று தண்டனைகளில் அவர் எதை தேர்ந்தெடுத்தார்? (2 சாமுவேல் 24:12-15)

13. யூத ஆசாரியனான எஸ்றா எந்த மூன்று பைபிள் புத்தகங்களை எழுதினார்?

14. பவுல் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று தேசாதிபதி பேலிக்ஸ் அறிந்து கொண்டார்? (அப்போஸ்தலர் 23:34)

15. தாவீதுக்கு எதிராக கலகம் செய்தபோது அப்சலோமுக்கும், அப்சலோம் கொல்லப்பட்ட பிறகு தாவீதுக்கும் இராணுவத் தலைவனாக இருந்தது யார்? (2 சாமுவேல் 17:25; 19:13)

16. தாவீதுக்கு அவருடைய மகனான அப்சலோம் இறந்த செய்தியைத் தெரிவிக்க படைத் தலைவர் யோவாப் யாரை தேர்ந்தெடுத்தார்? (2 சாமுவேல் 18:21, 32)

17. தனது மகன் யோசேப்பை ஒரு துஷ்ட மிருகம் பட்சித்துப் போட்டதென்ற முடிவுக்கு யாக்கோபு எப்படி வந்தார்? (ஆதியாகமம் 37:31-33)

18. இயேசுவுக்கு தாயாகப் போகிற செய்தியை மரியாளிடம் சொன்ன தேவதூதன் பெயர் என்ன? (லூக்கா 1:26-31) (g05 2/8)

வினாடி வினாவுக்கான விடைகள்

1. அவர்கள் கடவுளுடைய “புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு”

2. தண்ணீரை திராட்சரசமாக மாற்றியது; கானா

3. ஆதாமிலிருந்து எடுக்கப்பட்ட விலா எலும்பு

4. ஏலி

5. கலம்

6. “காலங்களின் அடையாளங்களை”

7. கோகும் அவனுடைய ‘சேனையும்’

8. ஏனெனில் ‘அவர்கள் இருதயமோ அவருக்கு தூரமாய் விலகியிருந்தது’

9. காம்

10. தாண்

11. பாவு

12. கொள்ளைநோய்

13. 1 நாளாகமம், 2 நாளாகமம், எஸ்றா

14. சிலிசியா

15. அமாசா

16. பேர் குறிப்பிடப்படாத ஒரு கூஷி

17. இரத்தத்தில் தோய்க்கப்பட்ட யோசேப்பின் பல வருண அங்கியைப் பார்த்து

18. காபிரியேல்