‘அது என் இதயத்தை ஆழமாக தொட்டது’
‘அது என் இதயத்தை ஆழமாக தொட்டது’
எவ்வாறு கடவுளுடன் நெருக்கமான உறவை நீங்கள் வைத்துக்கொள்ள முடியும்? யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற புத்தகம் அநேகருக்கு உதவியளித்து வருகிறது. உதாரணமாக, 25 வருடங்களாக யெகோவாவின் சாட்சியாக இருக்கும் ஒரு பெண்மணி இவ்வாறு கூறுகிறார்: “இந்தப் புத்தகம் ஒரு தலைசிறந்த படைப்பு.” அவர் தொடர்ந்து கூறுகிறார்: “இது என் இதயத்தை ஆழமாக தொட்டுவிட்டது; ஒருபோதும் இல்லாத அளவுக்கு யெகோவா மீது பக்திவைராக்கியம் கொள்ளச் செய்தது. யெகோவாவிடமும், என் கணவரிடமும், சபையிடமும் என்னை நெருங்கி வரச் செய்திருக்கிறது.”
யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற புத்தகம் உங்களுக்கும் உதவி செய்யும். இப்புத்தகத்தின் முகவுரை இவ்வாறு குறிப்பிடுகிறது: “பைபிளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கடவுளுடைய பண்புகளும் வழிகளும் நாம் ஆராய்ந்து அறிந்துகொள்வதற்கு ஏற்ற முக்கிய விஷயங்களாகும். யெகோவா தம்முடைய பண்புகள் ஒவ்வொன்றையும் வெளிக்காட்டும் விதத்தை ஆழ்ந்து சிந்திப்பதும், இயேசு கிறிஸ்து அவற்றை பூரணமாக வெளிக்காட்டிய விதத்தை அறிவதும், அவற்றை நாமும் எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம் என்பதை புரிந்துகொள்வதும் கடவுளிடம் நெருங்கிச் செல்ல உதவும்.”
யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகத்தைப் பற்றி கூடுதலான தகவல் பெற விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பூர்த்தி செய்து இப்பத்திரிகையில் 5-ம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்புங்கள். (g03 3/22)
◻ யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற புத்தகத்தைப் பற்றிய கூடுதலான தகவலை எனக்கு அனுப்பவும்.
◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.