காற்றில் பறந்து வந்தது
காற்றில் பறந்து வந்தது
இந்தியாவில் மும்பை நகர தெரு ஒன்றில் நடந்து சென்று கொண்டிருந்தார் ஒருவர். திடீரென காற்று அடிக்கவே, ஒரு துண்டுக் காகிதம் பறந்து வந்து அவரது காலருகே விழுந்தது. அதுதான் ராஜ்ய செய்தி எண் 36; அதாவது, “நியூ மிலனியம்—உங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும்?” என்ற தலைப்பை உடைய துண்டுப் பிரசுரம். அந்தத் தலைப்பைப் பார்த்ததுமே அதைப் பிரித்துப் படிக்கத் துடித்தார்; அதை உடனடியாக எடுத்து, கடகடவென்று முழுவதையும் வாசித்து முடித்தார். ஆர்வம் பொங்கி எழவே, இன்னுமதிக விஷயங்களைத் தெரிந்து கொள்ள விரும்பினார். ஆகவே, பைபிளையும் மற்ற புத்தகங்களையும் தனக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டார்.
யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்டிருக்கும் இந்தத் துண்டுப் பிரசுரத்தில் நம்பிக்கையளிக்கும் கருத்துக்கள் உள்ளன. நம்மை வாட்டும் பிரச்சினைகளான வியாதி, வறுமை, போர் போன்றவற்றுக்கு காரணம் ‘பேராசை, அவநம்பிக்கை, சுயநலம் ஆகியவையே; . . . இவற்றை வெறுமனே அரசியல், அறிவியல் ஆராய்ச்சி, தொழில் நுட்பம் ஆகியவற்றால் ஒழிக்க முடியாது’ என அது தெளிவாக விளக்குகிறது. அதோடு, கடவுள் எல்லாவித துன்மார்க்கத்தையும் இந்தப் பூமியிலிருந்து அடியோடு அகற்றிவிடுவார் என்றும் அது விவரிக்கிறது.
எதிர்காலத்தைப் பற்றி பைபிள் தரும் வாக்குறுதிகளைத் தெரிந்துகொள்ள உங்களுக்கு விருப்பமா? யெகோவாவின் சாட்சிகள் லட்சக்கணக்கானோரை அவர்களது வீடுகளிலேயே சந்தித்து பைபிளைக் கற்றுக்கொடுக்கிறார்கள். பைபிள் சார்ந்த பிரசுரங்களை இதற்காக அவர்கள் பயன்படுத்துகிறார்கள். கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேடு அவற்றில் ஒன்று. இதுபோன்ற கேள்விகளுக்கு அது பதிலளிக்கிறது: கடவுள் யார்? பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன? கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன? பைபிள் எவ்வாறு உங்கள் குடும்ப வாழ்க்கையை மேம்படுத்தும்?
யெகோவாவின் சாட்சிகள் உங்களை சந்தித்து, கடவுள் வெகு சீக்கிரத்தில் செய்யவிருப்பதைப் புரிந்துகொள்ள உதவ வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்களா? உங்களுக்கு உதவ அவர்கள் காத்திருக்கிறார்கள். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி இன்னுமதிக விஷயங்களையும் உங்களுக்கு விளக்குவார்கள். இதற்காக தயவுசெய்து பின்வரும் கூப்பனை பூர்த்தி செய்து பக்கம் 5-ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்புங்கள். (g03 1/22)
◻கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டை பற்றி எனக்கு தகவல் அனுப்பவும்.
◻இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.