மணவாழ்வை மலர வைக்கும் ஒரு புத்தகம்
மணவாழ்வை மலர வைக்கும் ஒரு புத்தகம்
ஐக்கிய மாகாணங்களில் உள்ள லூசியானாவில் வசிக்கும் லெஸ்லீ என்ற பெண்ணுக்கு, டூலேன் பல்கலைக்கழகத்தின் ஒரு பிரதிநிதியிடமிருந்து சென்ற வருடம் ஒரு ஃபோன் வந்தது. டூலேன் பல்கலைக்கழகமும் மற்றுமொரு பல்கலைக்கழகமும் இணைந்து, லூசியானாவில் உள்ள புதுமணத் தம்பதிகளைப் பற்றி சர்வே எடுப்பதாக அந்தப் பிரதிநிதி கூறினார்.
அந்த சர்வேயில் பங்குகொள்ள இந்தப் பெண்ணும் ஒப்புக்கொண்டாள். ஆகவே, அது சம்பந்தமான வினாப் பட்டியல் அவளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவள் அதைப் பூர்த்தி செய்து, அத்துடன் குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தின் ஒரு பிரதியையும் சேர்த்து அனுப்பினாள். அவளும் அவள் கணவரும் யெகோவாவின் சாட்சிகள் என்றும், இருவரும் திருமண வாழ்க்கைக்குத் தங்களை தயார்படுத்திக்கொள்ள இந்தப் புத்தகத்தை சேர்ந்து படித்ததாகவும் அவள் விளக்கினாள்.
ஒரு சில வாரங்களுக்குப் பிறகு, அந்தத் திட்டத்தின் இயக்குனரிடத்திலிருந்து இந்தக் கடிதம் வந்தது: “திருமணங்களை வளமாகவும் சந்தோஷமாகவும் ஆக்குவதற்கு என்ன தேவை என்பதை உங்களைப் போன்ற தம்பதிகளால்தான் எங்களுக்குக் கற்றுத் தர முடியும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். நீங்கள் இருவரும் மிகவும் வித்தியாசமான பின்னணியிலிருந்து வந்திருப்பது குறிப்பிடத்தக்கது; ஏனெனில் திருமணத்தில் அடிக்கடி உரசல்கள் ஏற்பட இதுதான் காரணமாக இருக்கிறது. ஆனால், இதுபோன்ற புத்தகங்களை படித்து திருமண வாழ்க்கைக்கு உங்களை தயார்படுத்திக்கொண்டதால், எந்த விதமான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அவற்றை வெற்றிகரமாக உங்களால் சமாளிக்க முடியும். ஒரு திருமணத்திற்கு மத சம்பந்தமான அடிப்படை கண்டிப்பாக அவசியமானது. உங்கள் இருவருக்கும் பலமான விசுவாசம் இருக்கிறது, கடவுளுடைய உதவியையும் சார்ந்திருக்கிறீர்கள். ஆகவே நீங்கள் அதிர்ஷ்டசாலிகள்.
“நீங்கள் அனுப்பிய புத்தகத்தை என் மேஜை மீதே வைத்திருக்கிறேன். திருமணம் செய்வதைக் குறித்து ஆலோசனை கேட்பதற்காக என்னிடம் வரும் மாணவர்களுக்கு இதைக் காண்பிக்கிறேன். இந்தப் புத்தகத்தை இதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. இது அபாரமான புத்தகம்.”
இந்தப் புத்தகம் மதிப்புமிக்க ஒன்று என்பதை நீங்களும் காண்பீர்கள் என நம்புகிறோம். கூடுதலான தகவலுக்காக, தயவுசெய்து இங்கு கொடுக்கப்பட்டுள்ள கூப்பனைப் பூர்த்தி செய்து, அதிலுள்ள விலாசத்திற்கோ அல்லது இந்தப் பத்திரிகையில் பக்கம் 5-ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கோ அனுப்புங்கள். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் குடும்ப வாழ்க்கையை கடவுள் விரும்பியதைப் போல் மகிழ்ச்சிகரமாக ஆக்குவதற்கும் உதவுகிற குறிப்பிட்ட ஆலோசனைகளைப் பெறுவீர்கள். (g02 4/22)
◻ குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தைப் பற்றிய கூடுதலான தகவலை எனக்கு அனுப்பவும்.
◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.