பயங்கரவாதம் முடிவு அருகில்!
பயங்கரவாதம்—முடிவு அருகில்!
ஜெரூசலமில் ஒரு பஸ், ஓக்லகாமா நகரத்தில் கூட்டரசு கட்டிடம் அல்லது மாஸ்கோவில் குடியிருப்பு கட்டிடம்—இவையெல்லாம் பயங்கரவாதத்தின் இலக்குகளாக இருக்கலாம். இதன் மூலம் அரசியல்வாதிகளுக்கு, ராணுவ தலைவர்களுக்கு அல்லது பொருளாதார தலைவர்களுக்கு வலிமைமிக்க செய்தியை தெரிவிக்கிறபோதிலும், அவர்களுடைய இலட்சியத்திற்கும் அவர்களுடைய இலக்கிற்கும் பெரும்பாலும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்களுடைய இலக்கு பொது மக்களே—பயங்கரவாதிகளுடைய இலட்சியத்தோடு எந்த சம்பந்தமும் இல்லாதவர்களே. அப்படியானால், ஏன் பயங்கரவாதிகள் பயங்கரவாதத்தை நாடுகிறார்கள்?
ஏன் பயங்கரவாதம்?
பயங்கரவாதம்—முறைப்படுத்தப்பட்டது, ஆழ்ந்து யோசிக்கப்பட்டது, திட்டமிடப்பட்டது. சாவுகளின் எண்ணிக்கையும் காயங்களுமே முக்கிய நோக்கம் அல்ல. இப்படிப்பட்ட படுகொலை இலட்சியத்தை சாதிக்க ஒரு வழி; அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்துவதன் மூலம் அதிகாரத்தை ஆட்டம் காண வைத்து தன்னுடைய இலட்சியத்தின் பக்கம் கவனத்தை திருப்புவதற்கு பயங்கரவாதி செய்யும் ஒரு செயல். பயங்கரவாதிகளுடைய செயல்களுக்கு பின்னால் இருக்கும் காரணிகள் சிலவற்றை கவனியுங்கள்.
பகைமை. “பயங்கரவாதத்திற்கு . . . பகைமை எண்ணெய் வார்க்கிறது” என லூயிஸ் ஜே. ஃப்ரீ குறிப்பிட்டார், இவர் ஐ.மா. ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனின் இயக்குநர். “இப்படிப்பட்ட பகைமையை மனதில் பேணி வளர்ப்பவர்கள், மதவெறி எனும் வர்ணம் தீட்டப்பட்ட, சதித்திட்டம் எனும் நிழலிடப்பட்ட, அறியாமை எனும் ஃபிரேம் போடப்பட்ட ஓர் உலகில் வாழ்கிறார்கள்.”
ஒடுக்குதல். “பிற கலாச்சாரங்களை அடியோடு அழிப்பதே சில தொகுதிகளையும் நாடுகளையும் சேர்ந்த தலைவர்களுடைய பகுத்தறிவற்ற இலக்கு என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்” என ஸ்டீபன் போமன் என்பவர் கழுகு கத்தும்போது என்ற ஆங்கில புத்தகத்தில் எழுதுகிறார். “ஆனால் நம்பிக்கையிழந்த நிலையால் உருவானதே பெரும்பாலான பயங்கரவாதம் என்பதும் தெளிவாக இருக்கிறது.”
ஏமாற்றம். “பெரும்பாலான சந்தர்ப்பங்களில், . . . மாற்ற முடியாத அரசியல், சமுதாய, பொருளாதார சக்திகள் ஆகியவற்றால் ஏற்பட்ட ஏமாற்றத்தாலேயே ஒருவர் பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறார்” என அர்பன் டெரரிஸம் என்ற நூலின் பதிப்பாசிரியர் கூறுகிறார்.
அநீதி. “பயங்கரவாதம் என்பது ஒரு பிரச்சினைக்கு அறிகுறியாக இருக்கிறது, ஆனால் அதுவே காரணமல்ல” என “பயங்கரவாதத்தின் கொள்கை” என்ற அறிக்கையில் மைக்கேல் ஷிமோஃப் சொல்கிறார். அவர் தொடர்ந்து சொல்கிறார்: “பயங்கரவாதத்திற்கு அடிப்படையாக இருக்கும் சமுதாய, அரசியல் பிரச்சினைகளை ஒழிப்பதே நம்முடைய நீண்ட கால இலக்காக இருக்க வேண்டும். . . . பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுகையில், சுதந்திரம், கண்ணியம், நீதி, மனிதநேய நெறிமுறைகளை முன்னேற்றுவிப்பதற்கு தீவிர முயற்சிகள் எடுக்க வேண்டும். அந்தத் தீவிர முயற்சிகள் வலிமைமிக்கவையாக இருக்கும்போது மாத்திரமே, பயங்கரவாதத்திற்கு எதிரான நம்முடைய போராட்டத்தையும் அவற்றை ஒழிப்பதற்கான திட்டங்களையும் நீக்க முடியும்.”
பயங்கரவாதத்திற்கான காரணங்களும் அதன் சரித்திரமும் பைபிள் சொல்வதை உண்மை என நிரூபித்திருக்கின்றன: ‘மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆண்டு வந்திருக்கிறான்.’ (பிரசங்கி 8:9) பயங்கரவாதத்தை ஊட்டி வளர்த்த போக்குகளையும்கூட பைபிள் இவ்வாறு முன்னறிவித்தது: “கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், . . . சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும் . . . இருப்பார்கள்.”—2 தீமோத்தேயு 3:1-5.
பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கு மனிதன் எடுக்கும் முயற்சிகள், அது எவ்வளவு நல்லெண்ணத்தோடு எரேமியா 10:23) ஆனால், பயங்கரவாத பிரச்சினைக்கு பரிகாரம் மனித சக்திக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும், அது நிச்சயமாகவே கடவுளுடைய சக்திக்கு அப்பாற்பட்டது அல்ல.
எடுக்கப்பட்டவையாக இருந்தாலும், வெற்றியடைய முடியாது. பைபிள் யதார்த்தமாக சொல்கிறது: “மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்ல . . . தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல.” (பரிகாரம்
குற்றமிழைக்கப்பட்டவர்களும் ஒடுக்கப்பட்டவர்களும் ஏமாற்றப்பட்டவர்களும் பைபிள் தரும் உறுதியான வாக்குறுதியில் ஆறுதலை கண்டடையலாம்: “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.”—நீதிமொழிகள் 2:21, 22.
கடவுள் தரும் இந்த வாக்குறுதி விரைவில் நிறைவேறும். இப்பொழுது ஆட்சி செய்துகொண்டிருக்கும் அவருடைய ஆட்சியாளராகிய இயேசு கிறிஸ்து அதை செய்து முடிப்பார். கிறிஸ்துவைப் பற்றி பைபிள் தீர்க்கதரிசனம் ஒன்று இவ்வாறு சொல்கிறது: “அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்[வார்].”—ஏசாயா 11:3, 4.
ஆம், கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து எல்லா அநீதியையும் அதற்கு காரணமானவர்களையும் அழிப்பார். கடவுளுடைய புதிய உலகில், எல்லா வித பயங்கரவாதமும் வன்முறையும் கடந்தகால சம்பவங்களாக இருக்கும். தீமை ஏற்படும் என்ற எந்த பயமுமின்றி பூமியிலுள்ள அனைவரும் பாதுகாப்புடன் வாழ்வார்கள்.—வெளிப்படுத்துதல் 21:3, 4.(g01 5/22)
[பக்கம் 12-ன் படம்]
எல்லா ஒடுக்குதலையும் அநீதியையும் கடவுள் விரைவில் நீக்குவார் என பைபிள் வாக்குறுதி தருகிறது