Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏன் ஒழுக்க சீர்குலைவு

ஏன் ஒழுக்க சீர்குலைவு

ஏன் ஒழுக்க சீர்குலைவு

கடந்த அக்டோபரில் ஈக்வடாரிலுள்ள லோஹா என்ற இடத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவர் யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியத்திற்கு பாராட்டு தெரிவித்தார். அவர் கவனித்த அநேக விஷயங்களில் பின்வருபவை சில:

“மனிதகுலத்தை வாட்டிவதைக்கும் துன்பங்களில் மிகவும் மோசமான ஒன்று ஒழுக்கச் சீர்குலைவு . . . மக்கள் பத்துக் கட்டளைகளை நிறைவேற்ற தவறிவிட்டார்கள், தங்களுடைய மனசாட்சியை குழிதோண்டி புதைத்துவிட்டார்கள் என தோன்றுகிறது. எனவே, மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. பகைமையையும் வன்முறையையும் குற்றச்செயலையும் போதை வஸ்துக்களின் கடத்தலையும் பயங்கரவாதத்தையும் கண்ணியத்திற்கு மதிப்பு தராததையும் எல்லா இடங்களிலும் நாள் தவறாமல் கேள்விப்படுகிறோம். . . .

“யெகோவாவின் சாட்சிகள் எந்தவித ஆரவாரமில்லாமல், தங்களுடைய கடமையை சமாதானத்தோடும் அமைதலோடும் செய்கிறார்கள், வீட்டுக்கு வீடு சென்று ஜனங்களை சந்திக்கிறார்கள், காவற்கோபுரம், விழித்தெழு! என்ற அழகிய இரண்டு பத்திரிகைகளை கொடுக்கிறார்கள், அவற்றில் கருத்தைக் கவரும் கட்டுரைகள் பிரசுரிக்கப்படுகின்றன. முக்கியமாக விழித்தெழு! பத்திரிகை மறுக்க முடியா விஞ்ஞானம், கலாச்சாரங்கள் போன்ற ஆவலை தூண்டும் பல்வேறு விஷயங்களைப் பற்றி அலசுகிறது. இவையனைத்தும் மெச்சத்தக்க விதத்தில் மிகவும் தெளிவாகவும் திருத்தமாகவும் எழுதப்படுகின்றன.”

இன்றைய ஒழுக்கச் சீர்குலைவு பட்டவர்த்தனமாக தெரிகிறது. ஆனால் இந்தப் பத்திரிகையில் 4-⁠ம் பக்கத்தில் “விழித்தெழு! பிரசுரிக்கப்படுவதன் நோக்கம்” என்ற பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, விழித்தெழு! “காரியங்களை ஆழ்ந்து ஆய்வுசெய்து, தற்கால நிகழ்ச்சிகளின் உண்மையான அர்த்தத்தை எடுத்துக்காட்டுகிறது.” கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? என்ற சிற்றேடு மனிதர்கள் சகித்திருக்கும் துன்பங்களை ஒத்துக்கொள்கிறது, அதுமட்டுமல்ல இன்னும் பல விஷயங்களையும் விளக்குகிறது. படுமோசமான விளைவுகளோடு ஒழுக்கச் சீர்குலைவு இன்னும் தொடர்வதற்கான காரணத்தை காட்டுகிறது. மிக முக்கியமாக, இதிலிருந்து எப்படி நிவாரணம் கிடைக்கும் என்பதையும் எடுத்துரைக்கிறது.

கீழ்க்காணும் கூப்பனை பூர்த்திசெய்து அதிலுள்ள விலாசத்திற்கோ அல்லது இந்தப் பத்திரிகையில் 5-⁠ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கோ அனுப்பி நீங்கள் கூடுதலான விபரத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? என்ற சிற்றேட்டை பற்றிய கூடுதலான தகவலை எனக்கு அனுப்புங்கள்.

◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.