உங்களுக்குத் தெரியுமா?
உங்களுக்குத் தெரியுமா?
(கொடுக்கப்பட்ட பைபிள் வசனங்களில் இந்த வினாடிவினாவுக்கான விடைகளைக் காணலாம்; பக்கம் 27-ல் விடைகள் அச்சிடப்பட்டுள்ளன. கூடுதலான தகவலுக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட, “வேதாகமத்தின்பேரில் உட்பார்வை” [ஆங்கிலம்] என்ற பிரசுரத்தை ஆராய்ந்து பாருங்கள்.)
1. கடவுளை எப்படி வணங்க வேண்டும் என சமாரிய பெண்ணிடம் இயேசு கூறினார்? (யோவான் 4:24)
2. உண்மையுள்ள ஊழியர்கள் கஷ்டங்களையும் துன்புறுத்துதலையும் தாங்கிக்கொள்வதற்கு கடவுள் எதை அளிக்கிறார்? (2 கொரிந்தியர் 4:7-10, NW)
3. அவர் நியாயாதிபதி கிதியோனின் இளைய மகன்; கிதியோனின் 70 குமாரர்கள் அபிமெலேக்கால் கொலை செய்யப்பட்டபோது தப்பினவர். அவர் யார்? (நியாயாதிபதிகள் 9:5)
4. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை இஸ்ரவேலர் அடைந்தபின், முழு தேசத்திற்கும் விடுதலை அளிக்கப்படும் 50-ம் வருடத்திற்கு என்ன பெயர்? (லேவியராகமம் 25:10)
5. தாவீதுக்கு எதிராக யுத்தம் செய்வதற்கு, அம்மோனின் குமாரர் எந்த சிறிய ராஜ்யத்திலிருந்து 12,000 பேரை கூலிக்கு அமர்த்தினார்கள்? (2 சாமுவேல் 10:6)
6. நேபுகாத்நேச்சார் தனது ஆட்சியின் இரண்டாம் வருடம் கண்ட சொப்பனத்தில் அவரை மிகவும் கலக்கமடையச் செய்தது எது? (தானியேல் 2:1, 31)
7. கடவுளுடைய பலத்தால் சிம்சோன் முதன்முதலில் எந்த விலங்கை தன் கைகளாலேயே இரண்டாக கிழித்தார்? (நியாயாதிபதிகள் 14:5, 6)
8. புதரில் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த எந்த விலங்கை ஈசாக்குக்கு பதிலாக ஆபிரகாம் பலி செலுத்தினார்? (ஆதியாகமம் 22:13)
9. அமலேக்கியருக்கு எதிராக அரசனாகிய சவுல் யுத்தம் செய்தபோது, எந்த விஷயத்தில் யெகோவாவின் கட்டளையை மீறினார்? (1 சாமுவேல் 15:3-9)
10. யூதர்களின் மதசார்பற்ற காலண்டரின்படி, பாபிலோனிய சிறையிருப்பிற்குப்பின் எத்தானிம் என்ற முதல் மாதத்திற்கு என்ன பெயர் வைக்கப்பட்டது?
11. இயேசுவின் பெற்றோர் தங்களது 12-வயது மகனை மூன்று நாட்களுக்குப்பின் எங்கு கண்டுபிடித்தார்கள்? (லூக்கா 2:46)
12. தீர்க்கதரிசனத்தின்படி, கழுதைக் குட்டியின்மேல் இயேசு வெற்றி பவனி வருகையில், யார் களிகூர வேண்டும்? (சகரியா 9:9)
13. “பரலோகத்திலே பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்” என்று இயேசு ஏன் அறிவுரை கூறினார்? (மத்தேயு 6:20)
14. முதிர்வயதில் சாலொமோன் மற்ற கடவுட்களுக்கு பலி செலுத்தியபோது, யெகோவா தம்முடைய கோபத்தை எவ்வாறு வெளிக்காட்டினார்? (1 இராஜாக்கள் 11:14, 23-26)
15. எல்லாக் காவலோடும் எதைக் காத்துக் கொள்ளும்படி பைபிள் பரிந்துரை செய்கிறது? (நீதிமொழிகள் 4:23)
16. இஸ்ரவேலருக்கு எதிராக யெகோவா சொன்ன வார்த்தைகள் அடங்கிய சுருளை ராஜாவாகிய யோயாக்கீமுக்கு வாசித்துக் காட்டியபோது அவர் என்ன செய்தார்? (எரேமியா 36:23)
17. தன் மகன் யோசேப்பை எது கொன்று போட்டதாக யாக்கோபு நினைத்தார்? (ஆதியாகமம் 37:33)
18. பூர்வ காலங்களிலிருந்தே எந்த பட்டணம் “பேரீச்சமரங்களின் பட்டணம்” என அறியப்பட்டது? (உபாகமம் 34:3)
வினாடி வினாவுக்கான விடைகள்
1. “ஆவியோடும் உண்மையோடும்”
2. “இயல்புக்கு மீறிய வல்லமை”
3. யோதாம்
4. யூபிலி
5. இஷ்தோப்
6. வெவ்வேறு உலோகங்களால் செய்யப்பட்ட மிகப்பெரிய மனித உருவம்
7. பால சிங்கம்
8. ஆட்டுக்கடா
9. அவர்களது ராஜாவாகிய ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவற்றையும் கொல்லாமல் தப்பவைத்த விஷயத்தில்
10. திஸ்ரி
11. ஆலயத்தில்
12. “சீயோனின் குமாரத்தி”
13. பூமிக்குரிய பொக்கிஷங்கள் அழியக்கூடியவை; அவற்றை வைத்து கடவுளிடம் நற்பெயரை சம்பாதிக்க முடியாது
14. சாலொமோனிடமிருந்து தம் ஆசீர்வாதத்தை நீக்கி, அவனுக்கு எதிராக பல விரோதிகளை எழுப்பினார்
15. அடையாள இருதயத்தை
16. அதை அறுத்து அக்கினியிலே எறிந்தார்
17. “ஒரு துஷ்ட மிருகம்”
18. எரிகோ