Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“இரண்டு சிறு காசுகள்”

“இரண்டு சிறு காசுகள்”

டவுன்லோட்:

  • லீட் ஷீட்

  1. 1. ஓர் ஏழை

    நம் தேவன் முன் வந்தாள்

    தன் கையில்

    ஓர் காணிக்கை ஏந்தி ஓரம் நின்றாள்

    கோடிகளை தந்திடும் இக்கூட்டத்தில்

    என் இரு காசுகள்

    என் அன்பை சொல்லாதென்றாள்....

    ஹோ.....

    (பல்லவி)

    யெஹோவா சொன்னார்

    என் கண்கள் பார்க்கும்

    ஓர் துளி தியாகத்தைக் கூட

    முகங்கள் அல்ல நான்

    நிஜங்கள் தான் பார்ப்பேன்

    செப்புக்காசல்ல வைரம் நீ

    என் போல் பார்

  2. 2. மறப்பேனோ உன்

    சேவை எல்லாம் கண்ணே

    ஓ மின்னுதே உன்

    பரிசெல்லாமே இன்னும் என் முன்னே

    நீ ஓசை இன்றி

    உன் எல்லாம் தந்த நேரம்

    உன் அன்பின் பேரோசை

    வான் எங்கும் கேட்க பூரித்தேனே

    (பல்லவி)

    யெஹோவா சொன்னார்

    என் கண்கள் பார்க்கும்

    ஓர் துளி தியாகத்தை கூட

    முகங்கள் அல்ல நான்

    நிஜங்கள் தான் பார்ப்பேன்

    செப்புக்காசல்ல வைரம் நீ

    என் போல் பார்

    (பிரிட்ஜ்)

    கற்பாறையில் நான் சிற்பங்கள் பார்ப்பேன்

    என் சாயல் பார்ப்பேன் நான் உள்ளங்களில்

    பார்ப்பேன் நான் ஆழங்கள்... ஹோ...

    (பல்லவி)

    யெஹோவா சொன்னார்

    என் கண்கள் பார்க்கும்

    ஓர் துளி தியாகத்தை கூட

    முகங்கள் அல்ல நான்

    நிஜங்கள் தான் பார்ப்பேன்

    செப்புக்காசல்ல வைரம் நீ

    என் போல் பார்

    நாமும் பார்ப்போமா தேவன் போல்