Skip to content

மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் இயேசுதான் மேசியா என்பதை நிரூபிக்கின்றனவா?

மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் இயேசுதான் மேசியா என்பதை நிரூபிக்கின்றனவா?

பைபிள் தரும் பதில்

 அதில் சந்தேகமே இல்லை. இயேசு பூமியில் வாழ்ந்தபோது “உலகத்துக்கு மீட்பராக” இருக்கப்போகிற, ‘தலைவராகிய மேசியாவை’ பற்றிய நிறைய தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றினார். (தானியேல் 9:25; 1 யோவான் 4:14) தன்னுடைய மரணத்துக்குப் பிறகும்கூட மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களை அவர் தொடர்ந்து நிறைவேற்றினார்.—சங்கீதம் 110:1; அப்போஸ்தலர் 2:34-36.

 “மேசியா” என்பதன் அர்த்தம் என்ன?

 மஷியாக் (மேசியா) என்ற எபிரெய வார்த்தைக்கும், இதற்கு இணையான கிறிஸ்டோஸ் (கிறிஸ்து) என்ற கிரேக்க வார்த்தைக்கும் “அபிஷேகம் செய்யப்பட்டவர்,” அதாவது “தேர்ந்தெடுக்கப்பட்டவர்,” என்று அர்த்தம். அப்படியென்றால், “இயேசு கிறிஸ்து” என்பதற்கு “அபிஷேகம் செய்யப்பட்ட இயேசு” அதாவது, “மேசியாவாகிய இயேசு” என்று அர்த்தம்.

 பைபிள் காலங்களில் ஒருவரை ஒரு விசேஷப் பொறுப்பில் நியமிக்கும்போது அவருடைய தலையில் எண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்வார்கள். (லேவியராகமம் 8:12; 1 சாமுவேல் 16:13) மேசியாவாக ஒரு உயர்ந்த பொறுப்பில் இருப்பதற்கு இயேசுவைக் கடவுள் நியமித்தார். (அப்போஸ்தலர் 2:36) இந்தப் பொறுப்பில் நியமித்தபோது, இயேசுவை எண்ணெயால் அபிஷேகம் செய்வதற்குப் பதிலாக தன்னுடைய சக்தியால் அவரைக் கடவுள் அபிஷேகம் செய்தார்.—மத்தேயு 3:16.

 மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களை ஒன்றுக்கும் அதிகமானவர்களால் நிறைவேற்ற முடியுமா?

 முடியாது. ஒரு கைரேகை எப்படி ஒருவரை மட்டும் அடையாளம் காட்டுகிறதோ, அதேபோல் பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் ஒரேவொரு மேசியாவைதான், அதாவது கிறிஸ்துவைதான், அடையாளம் காட்டுகிறது. ஆனாலும், “போலிக் கிறிஸ்துக்களும் போலித் தீர்க்கதரிசிகளும் வருவார்கள்; முடிந்தால், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக்கூட ஏமாற்றுவதற்குப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்” என்ற எச்சரிப்பை பைபிள் கொடுக்கிறது.—மத்தேயு 24:24.

 மேசியா எதிர்காலத்தில்தான் தோன்றுவாரா?

 இல்லை. இஸ்ரவேல் ராஜாவான தாவீதின் வம்சத்தில்தான் மேசியா வருவார் என்று பைபிள் முன்கூட்டியே சொன்னது. (சங்கீதம் 89:3, 4) ஆனால், தாவீதின் வம்சாவளிப் பதிவேடுகள் இப்போது இல்லை. ஒருவேளை, ரோமர்கள் கி.பி. 70-ல் எருசலேமைக் கைப்பற்றியபோது அவை அழிக்கப்பட்டிருக்கலாம். a அந்தச் சமயத்திலிருந்து, தான்தான் தாவீதின் ராஜ வம்சத்தில் வந்தவர் என்று யாராலும் நிரூபிக்க வாய்ப்பில்லாமல் போனது. ஆனால், இயேசுவின் காலத்தில் இந்த வம்சாவளிப் பதிவேடுகள் இருந்தன. அதனால்தான், இயேசு தாவீதின் வம்சத்தில் வந்தவர் என்பதை அவருடைய எதிரிகளால்கூட மறுத்துப் பேச முடியவில்லை.—மத்தேயு 22:41-46.

 மேசியாவைப் பற்றிய எத்தனை தீர்க்கதரிசனங்கள் பைபிளில் இருக்கின்றன?

 மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களின் எண்ணிக்கையைத் திட்டவட்டமாகச் சொல்லமுடியாது. ஏனென்றால், தீர்க்கதரிசனங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும் விதம் மாறுபடலாம். மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனம்தான் என்று தெளிவாகத் தெரிந்தாலும்கூட அது மாறுபடலாம். உதாரணத்துக்கு, ஏசாயா 53:2-7 வசனங்களில் மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனத்தின் பல விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சிலர் இந்த முழு பதிவையும் ஒரே தீர்க்கதரிசனமாகக் கணக்கிடலாம். மற்றவர்கள் இந்த ஒவ்வொரு விவரத்தையும் ஒவ்வொரு தீர்க்கதரிசனமாகக் கணக்கிடலாம்.

 இயேசுவில் நிறைவேறிய சில தீர்க்கதரிசனங்கள்

தீர்க்கதரிசனம்

தீர்க்கதரிசனப் பதிவு

நிறைவேறிய பதிவு

ஆபிரகாமின் சந்ததி

ஆதியாகமம் 22:17, 18

மத்தேயு 1:1

ஆபிரகாமுடைய மகன் ஈசாக்கின் சந்ததி

ஆதியாகமம் 17:19

மத்தேயு 1:2

யூதா கோத்திரத்தில் பிறப்பார்

ஆதியாகமம் 49:10

மத்தேயு 1:1, 3

தாவீதின் ராஜ வம்சத்தில் வருவார்

ஏசாயா 9:7

மத்தேயு 1:1

கன்னிப் பெண்ணுக்குப் பிறப்பார்

ஏசாயா 7:14

மத்தேயு 1:18, 22, 23

பெத்லகேமில் பிறப்பார்

மீகா 5:2

மத்தேயு 2:1, 5, 6

இம்மானுவேல் என்று அழைக்கப்படுவார் b

ஏசாயா 7:14

மத்தேயு 1:21-23

ஏழை குடும்பத்தில் பிறப்பார்

ஏசாயா 53:2

லூக்கா 2:7

அவர் பிறந்த பிறகு குழந்தைகள் கொல்லப்படுவார்கள்

எரேமியா 31:15

மத்தேயு 2:16-18

எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வரப்படுவார்

ஓசியா 11:1

மத்தேயு 2:13-15, 19, 20

நாசரேத்தூரார் c என்று அழைக்கப்படுவார்

ஏசாயா 11:1

மத்தேயு 2:23

அவருக்கு முன் ஒரு தூதுவர் அனுப்பப்படுவார்

மல்கியா 3:1

மத்தேயு 11:7-10

கி.பி. 29-ல் மேசியாவாக அபிஷேகம் செய்யப்படுவார் d

தானியேல் 9:25

மத்தேயு 3:13-17

தன்னுடைய மகனாக கடவுளால் ஏற்றுக்கொள்ளப்படுவார்

சங்கீதம் 2:7

அப்போஸ்தலர் 13:33, 34

கடவுளுடைய வீட்டின் மேல் பக்திவைராக்கியம் காட்டுவார்

சங்கீதம் 69:9

யோவான் 2:13-17

நல்ல செய்தியை அறிவிப்பார்

ஏசாயா 61:1

லூக்கா 4:16-21

கலிலேயாவில் செய்யப்பட்ட ஊழியம், ஒரு பெரிய வெளிச்சமாக இருக்கும்

ஏசாயா 9:1, 2

மத்தேயு 4:13-16

மோசேயைப் போல அற்புதங்களைச் செய்வார்

உபாகமம் 18:15

அப்போஸ்தலர் 2:22

மோசேயைப் போல கடவுள் சொல்வதையே பேசுவார்

உபாகமம் 18:18, 19

யோவான் 12:49

அநேகருடைய நோய்களைக் குணமாக்குவார்

ஏசாயா 53:4

மத்தேயு 8:16, 17

தன் பக்கம் கவனத்தை ஈர்க்க மாட்டார்

ஏசாயா 42:2

மத்தேயு 12:17, 19

கஷ்டப்படுகிறவர்களிடம் கரிசனையாக நடந்துகொள்வார்

ஏசாயா 42:3

மத்தேயு 12:9-20; மாற்கு 6:34

கடவுளின் நீதியை வெளிப்படுத்துவார்

ஏசாயா 42:1, 4

மத்தேயு 12:17-20

ஞானமுள்ள ஆலோசகர்

ஏசாயா 9:6, 7

யோவான் 6:68

யெகோவாவின் பெயரைத் தெரியப்படுத்துவார்

சங்கீதம் 22:22

யோவான் 17:6

உவமைகள் மூலமாகப் பேசுவார்

சங்கீதம் 78:2

மத்தேயு 13:34, 35

தலைவர்

தானியேல் 9:25

மத்தேயு 23:10

பலர் அவர்மேல் விசுவாசம் வைக்க மாட்டார்கள்

ஏசாயா 53:1

யோவான் 12:37, 38

தடுக்கி விழ வைக்கும் கல்லாக இருப்பார்

ஏசாயா 8:14, 15

மத்தேயு 21:42-44

மனிதரால் ஒதுக்கித்தள்ளப்படுவார்

சங்கீதம் 118:22, 23

அப்போஸ்தலர் 4:10, 11

காரணமில்லாமல் வெறுக்கப்படுவார்

சங்கீதம் 69:4

யோவான் 15:24, 25

கழுதையின் மேல் எருசலேமுக்கு வெற்றி பவனி

சகரியா 9:9

மத்தேயு 21:4-9

பிள்ளைகளால் புகழப்படுவார்

சங்கீதம் 8:2

மத்தேயு 21:15, 16

யெகோவாவின் பெயரில் வருவார்

சங்கீதம் 118:26

யோவான் 12:12, 13

நெருக்கமான நண்பனால் காட்டிக்கொடுக்கப்படுவார்

சங்கீதம் 41:9

யோவான் 13:18

30 வெள்ளிக் காசுகளுக்குக் காட்டிக்கொடுக்கப்படுவார் e

சகரியா 11:12, 13

மத்தேயு 26:14-16; 27:3-10

நண்பர்கள் அவரைவிட்டு ஓடிப்போவார்கள்

சகரியா 13:7

மத்தேயு 26:31, 56

அவருக்கு எதிராகப் பொய் சாட்சிகள் சொல்லப்படும்

சங்கீதம் 35:11

மத்தேயு 26:59-61

குற்றம்சாட்டுபவர்கள் முன்னால் அமைதியாக இருப்பார்

ஏசாயா 53:7

மத்தேயு 27:12-14

எதிரிகள் அவர்மேல் துப்புவார்கள்

ஏசாயா 50:6

மத்தேயு 26:67; 27:27, 30

தலையில் அடிப்பார்கள்

மீகா 5:1

மாற்கு 15:19

சாட்டையால் அடிப்பார்கள்

ஏசாயா 50:6

யோவான் 19:1

தன்னை அடிப்பவர்களைத் தடுக்க மாட்டார்

ஏசாயா 50:6

யோவான் 18:22, 23

அரசாங்க அதிகாரிகள் அவருக்கு எதிராக ஆலோசனை செய்வார்கள்

சங்கீதம் 2:2

லூக்கா 23:10-12

மரக்கம்பத்தில் வைத்து அவருடைய கைகளிலும் பாதங்களிலும் ஆணி அடிக்கப்படும்

சங்கீதம் 22:16

மத்தேயு 27:35; யோவான் 20:25

அவருடைய உடைக்காக மக்கள் குலுக்கல் போடுவார்கள்

சங்கீதம் 22:18

யோவான் 19:23, 24

குற்றவாளிகளில் ஒருவராகக் கருதப்படுவார்

ஏசாயா 53:12

மத்தேயு 27:38

பழித்துப் பேசப்படுவார், ஏளனம் செய்யப்படுவார்

சங்கீதம் 22:7, 8

மத்தேயு 27:39-43

பாவிகளுக்காகக் கொடுமைகளை அனுபவிப்பார்

ஏசாயா 53:5, 6

1 பேதுரு 2:23-25

கடவுளால் கைவிடப்பட்டது போலத் தெரியும்

சங்கீதம் 22:1

மாற்கு 15:34

காடியும் கசப்புப் பொருள் கலந்த திராட்சமதுவும் கொடுக்கப்படும்

சங்கீதம் 69:21

மத்தேயு 27:34

இறப்பதற்கு முன் தாகத்தில் தவிப்பார்

சங்கீதம் 22:15

யோவான் 19:28, 29

உயிரைக் கடவுளுடைய கையில் ஒப்படைப்பார்

சங்கீதம் 31:5

லூக்கா 23:46

உயிரை விடுவார்

ஏசாயா 53:12

மாற்கு 15:37

பாவத்திலிருந்து மீட்க மீட்புவிலையைக் கொடுப்பார்

ஏசாயா 53:12

மத்தேயு 20:28

எலும்புகள் முறிக்கப்படாது

சங்கீதம் 34:20

யோவான் 19:31-33, 36

குத்தப்படுவார்

சகரியா 12:10

யோவான் 19:33-35, 37

பணக்காரரோடு அடக்கம் செய்யப்படுவார்

ஏசாயா 53:9

மத்தேயு 27:57-60

உயிரோடு எழுப்பப்படுவார்

சங்கீதம் 16:10

அப்போஸ்தலர் 2:29-31

காட்டிக்கொடுத்தவனுக்குப் பதிலாக வேறொருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்

சங்கீதம் 109:8

அப்போஸ்தலர் 1:15-20

கடவுளுடைய வலது பக்கத்தில் உட்கார வைக்கப்படுவார்

சங்கீதம் 110:1

அப்போஸ்தலர் 2:34-36

a “யூத கோத்திரங்களையும் குடும்பங்களையும் பற்றிய வம்சாவளிப் பதிவுகள் [பொ.ச. 70-ல்] எருசலேம் அழிக்கப்பட்டபோதுதான் மறைந்துபோயின, அதற்கு முன்பு அல்ல என்பதில் சந்தேகமே இல்லை” என்று மெக்ளின்டாக் மற்றும் ஸ்ட்ராங்கின் சைக்ளோப்பீடியா சொல்கிறது.

b இம்மானுவேல் என்று எபிரெயப் பெயரின் அர்த்தம், “கடவுள் எங்களோடு இருக்கிறார்.” இது மேசியாவாக இயேசுவுக்கு இருக்கும் பொறுப்பை விவரிக்கிறது. பூமியில் அவர் மக்களோடிருந்து செய்த விஷயங்கள், கடவுள் தன்னை வணங்குகிறவர்களோடு இருக்கிறார் என்பதை நிரூபித்தது.—லூக்கா 2:27-32; 7:12-16.

c “நாசரேத்தூரார்” என்ற வார்த்தை நீட்ஸர் என்ற எபிரெய வார்த்தையிலிருந்து வந்திருக்கலாம். அதன் அர்த்தம், “தளிர்.”

d கி.பி. 29-ல் மேசியா தோன்றுவார் என்பதைக் காட்டும் பைபிள் காலக்கணக்கைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, “மேசியாவின் வருகையை தானியேல் தீர்க்கதரிசனம் முன்னறிவிக்கிற விதம்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

e இந்தத் தீர்க்கதரிசனம் சகரியா புத்தகத்தில் இருக்கிறது. ஆனால், இது “எரேமியா தீர்க்கதரிசியின் மூலம் சொல்லப்பட்டது” என்று பைபிள் எழுத்தாளரான மத்தேயு சொல்லியிருக்கிறார். (மத்தேயு 27:10) வேதாகமத்தில், ‘தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள்’ என்று அழைக்கப்பட்ட பகுதியில் எரேமியா புத்தகம் முதலில் இருந்ததாகத் தெரிகிறது. (லூக்கா 24:44) அதனால்தான், சகரியா புத்தகம் உட்பட அந்தத் தீர்க்கதரிசனப் புத்தகங்களின் முழு தொகுப்பையும் குறிப்பதற்காக “எரேமியா” என்று மத்தேயு சொல்லியிருக்கலாம்.