கடவுளுடைய அரசாங்கம் என்னவெல்லாம் செய்யும்?
பைபிள் தரும் பதில்
கடவுளுடைய அரசாங்கம் எல்லா மனித அரசாங்கங்களையும் அழித்துவிட்டு, இந்த முழு பூமியையும் ஆட்சி செய்யத் தொடங்கும். (தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 16:14) அந்தச் சமயத்தில், கடவுளுடைய அரசாங்கம் . . .
நமக்குக் கெடுதல் செய்கிற சுயநலமிக்க பொல்லாதவர்களை நீக்கிவிடும். “பொல்லாதவர்கள் இந்தப் பூமியிலிருந்து அடியோடு அழிக்கப்படுவார்கள்.”—நீதிமொழிகள் 2:22.
எல்லா போர்களையும் முடிவுக்குக் கொண்டுவரும். “[கடவுள்] பூமி முழுவதும் போர்களுக்கு முடிவுகட்டுகிறார்.”—சங்கீதம் 46:9.
பூமியில் சந்தோஷத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவரும். “ஒவ்வொருவரும் தங்கள் திராட்சைக் கொடியின் கீழும் அத்தி மரத்தின் கீழும் உட்கார்ந்திருப்பார்கள். அவர்களைப் பயமுறுத்த யாரும் இருக்க மாட்டார்கள்.”—மீகா 4:4.
பூமியை ஒரு பூஞ்சோலையாக ஆக்கும். “வனாந்தரமும் வறண்ட நிலமும் பூரிப்படையும். பாலைநிலம் பூ பூத்து, களைகட்டும்.”—ஏசாயா 35:1.
மனதுக்குப் பிடித்தமான, பிரயோஜனமான வேலையை எல்லாருக்குமே தரும். “[கடவுளால்] தேர்ந்தெடுத்த ஜனங்கள் தங்கள் உழைப்பின் பலனை முழுமையாக அனுபவிப்பார்கள். அவர்களுடைய கடின உழைப்பு வீண்போகாது.”—ஏசாயா 65:21-23.
நோய்களையெல்லாம் நீக்கிவிடும். “‘எனக்கு உடம்பு சரியில்லை’ என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.”—ஏசாயா 33:24.
முதுமையின் பிடியிலிருந்து நம்மை விடுவிக்கும். “அவனுடைய உடல் இளமையில் இருந்ததைவிட ஆரோக்கியம் அடையும். அவன் மறுபடியும் இளமைத் துடிப்போடு வாழ்வான்.”—யோபு 33:25.
இறந்தவர்களை மறுபடியும் உயிருக்குக் கொண்டுவரும். “நினைவுக் கல்லறைகளில் இருக்கிற எல்லாரும் [இயேசுவின்] குரலைக் கேட்டு வெளியே வருவார்கள்.”—யோவான் 5:28, 29.